சட்டக்கல்லூரி மாணவர்களின் ஆங்கில மொழி விவகாரம் குறித்த இறுதித் தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் - நீதி அமைச்சர்

05 Jan, 2023 | 02:48 PM
image

(இராஜதுரை ஹஷான், எம்.ஆர்.எம்.வசீம்)

சட்டக் கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற விவகாரம் தொடர்பில் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை எடுக்கப்பட்டுள்ளது.

இறுதி தீர்மானம் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் வியாழக்கிழமை (ஜன.05)பாராளுமன்ற அமர்வு இடம்பெற்ற போது பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச முன்வைத்த கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.

சட்டக்கல்லூரி மாணவர்கள்  தமது தாய்மொழியில் பரீட்சைக்கு தோற்றும் உரிமை மறுக்கப்பட்ட நிலையில் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற தீர்மானம் பிரச்சனைக்குரியதாக உள்ளது.

ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்பித்தால் அந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக வாக்களித்து அந்த தீர்மானத்தை இரத்து செய்ய முடியும். 

ஆனால் இதுவரை அந்த வர்த்தமானி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை, எடுக்கப்பட்டுள்ள தீர்மாhனத்தை அறிய தருமாறு பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நீதியமைச்சரிடம் கேள்வி எழுப்பினார் .

இதன்போது எழுந்து உரையாற்றிய நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆங்கில மொழியில் மாத்திரம் பரீட்சைக்கு தோற்ற வேண்டும் என்ற தீர்மானம் தொடர்பில் சட்ட ஆய்வு கவுன்சிலிடம் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளோம்.இறுதி தீர்மானம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என பதிலளித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02