10 கோடி ரூபாவுக்கு விற்பனையான ஒரு மீன்

Published By: Sethu

05 Jan, 2023 | 12:31 PM
image

ஜப்பானின் பாரம்பரிய புதுவருட மீன் ஏலவிற்பனையில், 273,000 அமெரிக்க டொலர்களுக்கு மீன் ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டோக்கியோவிலுள்ள டோயோசு (Toyosu) மீன் சந்தையில் புத்தாண்டு பிறந்தவுடன் நடைபெறும் ஏல விற்பனையில் பெருந்தொகை விலைக்கு மீன் விற்பனை செய்யப்படுவது பாரம்பரியமாகவுள்ளது.

வழமையான விலையைவிட இந்த புத்தாண்டு ஏலத்தில் அதிக விலை கொடுத்து மீனை வாங்குவதை சிலர் பெருமையாக கருதுகின்றனர்.

இவ்வருட பாரம்பரிய ஏல விற்பனை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போது 212 கிலோகிராம் எடையுடைய புளூபின் டூனா (Bluefin tuna / புளூபின் ரூனா) ஒரு மீன் 36.04 மில்லியன் ஜப்பானிய யென்களுக்கு (273,000 அமெரிக்க டொலர்கள், சுமார் 10 கோடி இலங்கை ரூபா, 2.25 கோடி இந்திய ரூபா) விற்பனை செய்யப்பட்டது. 

எனினும், இப்பாரம்பரிய புதுவருட ஏல விற்பனையில் மீனொருக்கு வழங்கப்பட்ட ஆகக்கூடுதலான விலை இதுவல்ல. 2019 ஆம் ஆண்டு 278 கிலோகிராம் எடையுடைய புளூபின் டூனா ரக மீன் 336.1 மில்லியன் யென்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.

எனினும், கடந்த வருடம் அதிகபட்சமாக 16.88 மில்லியன் யென்களுக்கே மீனொன்று விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அனைவரும் பணி நீக்கம்?

2025-02-05 09:43:19
news-image

காசாவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின் கீழ்...

2025-02-05 06:36:32
news-image

ஸ்வீடனில் கல்வி நிலையத்தில் துப்பாக்கிச் சூடு...

2025-02-05 03:14:15
news-image

யுஎஸ்எயிட்டின் பணியாளர்கள் அலுவலகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி...

2025-02-04 14:42:03