(லோகேஸ்வரன்)

வுல்ப்கிங் என மக்களால் அழைக்கப்படுபவரும் யாங்சங்செங் என்ற இயற்பெயருடைய 71 வயதானவர் கடந்த 9 வருடங்களாக 150 ஓநாய்களை பராமரித்து வளர்த்து வருகிறார். 

சீனாவின் ஜின்ஜியாங் பகுதியை சேர்ந்த இவர் 2007 ஆம் ஆண்டு தொடக்கம் ஓநாய்களை வளர்த்து வருகின்றார்.

நண்பர் ஒருவர் மூலம் கிடைக்கபெற்ற ஒரு பெண் ஓநாயையும் அதன் குட்டிகளையும் வளர்க்க ஆரம்பித்துள்ளார். தொடர்ந்து மற்றொரு நண்பர் ஊடாக 9 ஓநாய்கள் கிடைக்கப்பெறவே 2008ஆம் ஆண்டு 20 ஹெக்டயர் நிலத்தை வாங்கி ஒநாய்களை வளர்ப்பதற்கு ஆரம்பித்துள்ளார். 

தற்போது அவரிடம் 9 வகைகளைச் சேர்ந்த 150 ஓநாய்கள் காணப்படுகின்றன.

வுல்ப்கிங் ஓநாய்களை பராமரிப்பதற்காக இதுவரை காலமும் 169 கோடிகளை செலவிட்டுள்ளார். 

தன்னை ஒரே ஓருமுறை மாத்திரமே ஓநாய் கடித்துள்ளதாக கூறும் இவர் தனது பண்ணையில் 1000 ஓநாய்கள் உருவாகியதும் அவற்றை காட்டில் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.