சுப்பர் ஸ்டாரை பின்பற்றும் சிவகார்த்திகேயன்

Published By: Digital Desk 2

05 Jan, 2023 | 11:01 AM
image

தமிழ் திரையுலகின் சுப்பர் ஸ்டார் யார்? என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் விஜய் இடையே பெரும் சர்ச்சையும், விவாதமும் எழுந்து வரும் நிலையில், ரசிகர்களின் நிரந்தர சுப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த்தின் திரையுலக பாதையை, வளர்ந்து வரும் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனும் பின்பற்றி பயணிக்கிறார் என திரையுலகினர் தெரிவித்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'டாக்டர்', 'டான்'. இந்த இரண்டு திரைப்படங்களும் வணிக ரீதியாக பாரிய வெற்றியை பெற்று, இந்திய மதிப்பில் 100 கோடி ரூபாய் மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான திரைப்படம் :பிரின்ஸ்'. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் நேரடியாக தயாராகி வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாக எதிர்பார்த்த இலக்கை எட்டவில்லை.

இதனால் அதிருப்தி அடைந்த விநியோகஸ்தர்கள், தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்திற்கு இழப்பீடு வழங்குமாறு பட தயாரிப்பு நிறுவனத்திடமும், நாயகன் சிவகார்த்திகேயனிடமும் முறையிட்டனர்.

இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியில் சிவகார்த்திகேயனும், தயாரிப்பு நிறுவனமும் 50 சதவீத அளவிற்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டு, இந்திய மதிப்பில் மூன்று கோடி ரூபாயை இழப்பீடாக வழங்கினர்.

இந்த தொகையை சிவகார்த்திகேயன் விநியோகஸ்தருக்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் சிவகார்த்திகேயனின் இந்த போக்கினை வரவேற்ற திரையுலக வணிகர்கள், சுப்பர் ஸ்டாருக்கு பின் அவரது பாணியை சிவ கார்த்திகேயன் பின்பற்றுவதாக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டனர்.

சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் மடோனா அஸ்வின் இயக்கத்தில் தயாராகி வரும் 'மாவீரன்' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பில் பங்கு பற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35