நடிகர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், விநியோகஸ்தர், இயக்குநர் என பன்முக ஆளுமை திறனுடன் தமிழ் திரையுலகில் நட்சத்திர அந்தஸ்துடன் வலம் வரும் தனுஷ், சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் மீண்டும் பெயரிடப்படாத புதிய திரைப்படத்தை இயக்குகிறார் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
ராஜ்கிரண் நடிப்பில் 2017 ஆம் ஆண்டில் வெளியான 'ப. பாண்டி' எனும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நடிகர் தனுஷ். அதன் பிறகு மீண்டும் படத்தை இயக்குவதை விட நடிப்பில் தொடர்ந்து கவனம் செலுத்தினார். தற்போது மீண்டும் பெயரிடப்படாத புதிய படத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார்.
இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாகவும், நடிகரும், இயக்குநருமான எஸ். ஜே. சூர்யா எதிர் நாயகனுமாக நடிக்கக்கூடும் என தெரிய வருகிறது. இந்த திரைப்படத்தை திருச்சிற்றம்பலம் மேக்கர்ஸ் எனும் பட நிறுவனத்தை தொடங்கி, அதனூடாக நடிகர் தனுஷ் தயாரித்து இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
மேலும் நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தயாராகி வரும் 'கேப்டன் மில்லர்' என்ற படத்தின் படப்பிடிப்பில் பங்கு பற்றி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்தவுடன் அவரது இயக்கத்தில் தயாராகும் படத்தின் பணிகள் தொடங்கும் என்று தெரிய வருகிறது.
இதனிடையே ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகி வரும் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தில் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் என்பதும், அவர் விரைவில் தனுஷின் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பதும், இதன் மூலம் கணவன் - மனைவி என இருவரது இயக்கத்திலும் நடித்த நாயகன் விஷ்ணு விஷால் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM