இரத்தினபுரி - எம்பிலிப்பிடிய வீதியின் 97 ஆம் தூண் அருகில் வைத்து 80 கிலோகிராம் கஞ்சாவுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அரிசி மூட்டைகளில் மறைத்து வைத்து குறித்த கஞ்சா தொகை கடத்தப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிடிய பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபர் ஹம்பெகமுவ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

இதேவேளை, குறித்த நபரையும் மீட்கப்பட்ட கஞ்சாவினையும் எம்பிலிப்பிடிய நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.