இந்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி உடல் நலக்குறைவால் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை (ஜன.04) டெல்லியில் உள்ள கங்கா ராம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சோனியா காந்தியை அவரது மகளும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வைத்தியசாலையில் உடனிருந்து கவனித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
சோனியா காந்தியின் உடல் நிலை குறித்து வைத்தியசாலை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரான சோனியா காந்தி இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரை மருத்துவர் அரூப் பாசு தலைமையிலான மருத்துவக்குழு கண்காணித்து வருகிறது.
சோனியா காந்திக்கு சுவாச குழாய் பகுதியில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்காக உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ராகுல் காந்தி தனது அடுத்த கட்ட பாரத் ஜோடோ யாத்திரையை கடந்த செவ்வாய் கிழமை உத்தரப் பிரதேச மாநிலத்தில் தொடங்கினார். அன்றில் இருந்தே, சோனியா காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், செவ்வாய் மாலையே ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் டெல்லி திரும்பினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM