‘அப்பல்லோ 7’ விண்கலத்தில் விண்வெளிக்கு சென்று வந்த அமெரிக்க விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் காலமானார்

Published By: Digital Desk 3

05 Jan, 2023 | 12:08 PM
image

‘அப்பல்லோ 7’ விண்கலத்தில் விண்வெளி சென்று வந்த விண்வெளி வீரர் வால்டர் கன்னிங்ஹாம் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

நாசா 1968-ம் ஆண்டு அக்டோபர் 11 ஆம் திகதி முதல் முறையாக 'அப்பல்லோ 7' என்ற விண்கலத்தில் மனிதர்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது. 

டான் எப் ஐசெல், வால்டர் எம். ஷிரா மற்றும் வால்டர் கன்னிங்ஹாம் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் 'அப்பல்லோ 7' விண்கலத்தில் 11 நாட்கள் விண்வெளியை சுற்றி வந்தனர். அத்தோடு அவர்கள் தங்கள் விண்வெளி பயணத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பவும் செய்தனர். பின்னர் அக்டோபர் 22 ஆம் திகதி அவர்கள் அதே விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதன் மூலம் விண்வெளி சென்று திரும்பிய முதல் அமெரிக்க விண்வெளி வீரர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றனர்.

'அப்பல்லோ 7' விண்கலத்தில் விண்வெளி சென்று வந்த விண்வெளி வீரர்களான டான் எப் ஐசெல், வால்டர் எம். ஷிரா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், கடைசி நபராக வால்டர் கன்னிங்ஹாம் மட்டும் உயிருடன் இருந்து வந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று அவர் 90 ஆவது வயதில் மரணமடைந்தார்.  அமெரிக்கக் கடற்படையிலும் சிறப்புப் படையிலும் விமானியாக பணியாற்றிய கன்னிங்ஹாம், ஓய்வு பெறுவதற்கு முன் போர் விமானியாக 54 பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு 1963 ஆம் ஆண்டு அவர் நாசாவின் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32
news-image

ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதல் - 14...

2025-02-16 13:35:43
news-image

உக்ரைன் குறித்து ரஸ்யாவுடன் இடம்பெறும் பேச்சுவார்த்தைகளில்...

2025-02-16 13:17:18
news-image

மோடி குறித்து கார்ட்டூன்; விகடன் இணையதளம்...

2025-02-16 12:06:42
news-image

80 வருடங்களிற்கு முன்னர் தாய்லாந்திலிருந்து மியன்மாருக்கு...

2025-02-16 11:18:34
news-image

டெல்லி புகையிரத நிலையத்தில் கூட்ட நெரிசலில்...

2025-02-16 07:20:57
news-image

பாப்பரசரின் உடல்நிலை குறித்து வத்திக்கானின் அறிவிப்பு

2025-02-15 13:04:33
news-image

படகுடன் மகனை விழுங்கிய திமிங்கிலம் -...

2025-02-14 17:35:40
news-image

உடல்நலப்பாதிப்பு - பாப்பரசர் மருத்துவமனையில் அனுமதி

2025-02-14 16:24:16