விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் சர்வதேச மாநாடொன்று எதிர்வரும் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

"மக்களுக்கான விஞ்ஞானம் - ஆசியாவின் நிலையான அபிவிருத்திக்காக நவீன தொழில்நுட்பங்களை அனைவருக்கும் கிடைக்கும் படி செய்தல்" என்ற தொனிப்பொருளின் கீழ் ஆசியாவின் விஞ்ஞான கழகத்தின் 16 ஆவது சர்வதேச மாநாடானது  நடைபெறவுள்ளது. 

தேசிய அபிவிருத்திக்காக வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் பங்களிப்புக்களும், அவற்றினால் ஏற்படும் வெற்றிகளும், தோல்விகளும், சமூக நலன்களுக்கான பங்களிப்பு, அவற்றினை கையாள்வதிலுள்ள சவால்கள், அவற்றிலிருந்து எவ்வாறு மீண்டுவர முடியும் என்பன தொடர்பிலும் பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.