புகையிரத பாதை புனரமைப்பில் நிதி மோசடி குறித்து புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் விளக்கம்

Published By: Digital Desk 2

04 Jan, 2023 | 04:58 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மஹவ சந்தி முதல் ஓமந்தை வரை ஒரு வழி புகையிரத பாதையை புனரமைப்பதற்கு பதிலாக அப்பகுதியில் இரு வழி பாதையை நிர்மாணிப்பது புகையிரத சேவை மேம்பாட்டுக்கு சிறந்ததாக அமையும்.

ஒரு வழி பாதை புனரமைப்பில் இடம்பெறவுள்ள நிதி மோசடி தொடர்பில் ஜனாதிபதி உட்பட உரிய தரப்பிற்கு பலமுறை அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது கவலைக்குரியது.

நாட்டு மக்கள் உண்மை தன்மையை விளங்கிக்கொள்ள வேண்டும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் கசுன் சாமர குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

இந்திய கடனுதவி திட்டத்தின் கீழ் 91 மில்லியன் டொலர் செலவில் மஹவ தொடக்கம் ஓமந்தை வரையான  புகையிரத பாதையை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளுக்காக அநுராதபுரம் தொடக்கம் வவுனியா வரையான புகையிரத சேவை இன்று முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளது.

புகையிரத சேவை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான பயணிகள் புகையிரத சேவையை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து காங்கேசன்துறை நோக்கி நாளாந்தம் நான்கு புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த புகையிரத பாதையில் உள்ள தண்டவாளங்களை அகற்றி, பாதையை புனரமைப்பதை விட இரு புகையிரத பாதைகளை நிர்மாணித்தால் புகையிரத பயணத்திற்காக செலவாகும் காலத்தை சேமிக்கலாம்.

பல மில்லியன் ரூபாவை செலவு செய்து ஒரு வழி பாதையை நிர்மாணிப்பதற்கு இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இரட்டை பாதையை நிர்மாணித்தால், ஏதேனும் காரணத்தால் புகையிரதம் தடம் புரண்டால் ஏனைய பாதையை பயன்படுத்தி புகையிரத சேவையை தொடர முடியும்.

ஆகவே ஒரு வழி பாதைக்கு பதிலாக இருவழி பாதையை நிர்மாணிக்கும் வகையில் ஒப்பந்தத்தை திருத்தம் செய்யுமாறு கோரிக்கை விடுக்கிறோம்.

தேசிய திட்டங்கள் ஊடாக பொது நிதி துஷ்பிரயோகம் செய்யப்படுவதை வன்மையான எதிர்க்கிறோம். ஏனெனில் புகையிரத சேவையால் பயன்பெறாத மக்களின் வரி கூட இந்த ஊழல் கொடுக்கல் வாங்கலுக்காக செலவு செய்யப்படவுள்ளமை முறையற்றதாகும்.

இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதிக்கும் உரிய தரப்பிற்கும் பலமுறை எடுத்துரைத்தும் இதுவரை அது குறித்து அவதானம் செலுத்தாமல் இருப்பது கவலைக்குரியது.

மஹவ தொடக்கம் ஓமந்தை வரையான புகையிரத பாதையை ஒருவழி பாதையாக நவீனமயப்படுத்த வேண்டுமாயின் கடந்த காலங்களில் கொவிட் தாக்கத்தினால் புகையிரத சேவை பல மாதங்களாக முடக்கப்பட்டிருந்தது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விளக்கமறியல் உத்தரவுகளால் சிறைகளில் நெரிசல்; மாற்று...

2026-07-13 06:04:37
news-image

காலநிலை மாற்றத்தால் தித்வா புயல் போன்ற...

2026-07-13 05:57:04
news-image

68 ஆயிரத்தைக் கடந்தது டெங்கு நோயாளர்களின்...

2026-07-13 01:12:26
news-image

பெரும்பாலான பகுதிகளில் மழை; வடக்கு, கிழக்கில்...

2026-07-13 01:10:09
news-image

நம்பிக்கையில்லாப் பிரேரணையால் எந்தப் பயனும் இல்லை...

2026-07-12 15:08:42
news-image

நாட்டில் எந்தவொரு பௌத்த துறவியாவது பிரபாகரனுடன்...

2026-07-12 13:50:12
news-image

நீதிபதிகளின் ஓய்வு வயது நீடிப்பு முயற்சி...

2026-07-12 16:11:28
news-image

நீர்கொழும்பு சிறை மோதலுக்கு பொறுப்பேற்று நீதி...

2026-07-12 16:12:40
news-image

சிறைச்சாலை கைதிகளால் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட...

2026-07-12 14:00:45
news-image

கட்டாய உழைப்பு உற்பத்திகளை இறக்குமதி செய்வதற்கு...

2026-07-12 16:45:01
news-image

2027 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம்...

2026-07-12 16:51:31
news-image

காலநிலை மாற்றங்களை தேசிய பாதுகாப்பு பிரச்சினையாக...

2026-07-12 16:53:25