ஜனாதிபதி தேர்தலில் 94 வயதில் போட்டியிடப்போகும் ஆபிரிக்க தலைவர்

Published By: Raam

18 Dec, 2016 | 10:59 AM
image

(லோகேஸ்வரன்)

சிம்பாபேவின் ஜனாதிபதி ரொபர்ட் முகாபே அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஆளும் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதத்துடன் 94 வயது பூர்த்தியை அடையும் இவர் 2018 ஆம் ஆண்டு இடம் பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இருப்பினும் 2013ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியல் திருத்தத்தில் அவர் மேலும் ஒருமுறைதான் தலைவராக இருக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆபிரிக்க பிராந்தியத்தில் சுதந்திரமடைந்த காலம் தொட்டு ஒரு நாட்டை தொடர்ச்சியாக ஆண்டு வரும் ஜனாதிபதி இவராவார் (1980 ஆம் ஆண்டு தொடக்கம்). இவரின் ஆட்சியில் பல்வேறு மோசடி குற்றச்சாட்டல்கள் சுமத்தப்பட்டாலும் இவரின்ஆட்சி கையிருப்பு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

கட்சியின் வேட்பாளரை தெரிவு செய்யும் இளம் உறுப்பினர்களுக்கான மாநாடு இடம்பெற்றப்போதே இவர் கட்சியின் ஒருமித்த ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

இவர் வாழ்நாள் ஜனாதிபதியாக இருக்க வேண்டும் என பாடலும் பாடப்பட்டது. இதில் முகாபேயும் அப்பாடலை பாடியதோடு, தனது முகம் பதிக்கப்பட்ட உடையை அணிந்து தனக்கான அரசியல் விளம்பரத்தை வெளிபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விண்வெளி பாய்ச்சல் ; விண்வெளி ஆராய்ச்சியில்...

2025-02-07 17:21:00
news-image

காசாவில் இனச்சுத்திகரிப்பில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய...

2025-02-07 14:08:06
news-image

மோதல்கள் முடிவடைந்ததும் காசாவை இஸ்ரேல் அமெரிக்காவிடம்...

2025-02-07 11:05:56
news-image

அமெரிக்காவிற்கும் அதன் நெருங்கிய சகாவான இஸ்ரேலிற்கும்...

2025-02-07 10:16:14
news-image

இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரம் -...

2025-02-06 14:25:03
news-image

கைவிலங்கு, கால்களில் சங்கிலி...’ - அமெரிக்கா...

2025-02-06 11:10:33
news-image

கொங்கோ - கோமா சிறைச்சாலையில் நூற்றுக்கும்...

2025-02-06 09:47:40
news-image

புது தில்லி சட்டப்பேரவை தேர்தல் :...

2025-02-05 23:19:20
news-image

'காசாவிலிருந்து வெளியேறப்போவதில்லை வேறு எங்கும் செல்லப்போவதில்லை"

2025-02-05 15:32:25
news-image

சட்டவிரோதமாக குடியேறிய 18,000 பேரில் முதல்கட்டமாக...

2025-02-05 11:23:30
news-image

காசாவிற்கு அமெரிக்க படையினரை அனுப்புவாரா டிரம்ப்...

2025-02-05 10:36:48
news-image

காசா மக்களை அங்கிருந்து வெளியேற்றும் முயற்சிகளை...

2025-02-05 10:31:03