‘பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்’ எனும் நூலின் அறிமுக நிகழ்வு எதிர் வரும் 7ஆம் திகதி சனிக்கிழமை மாலை 430மணிக்கு கொழும்புத் தமிழ்ச் சங்கம் வினோதன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கைப் பத்திரிகைகளில் பிரசுரமாகிய கட்டுரைகளே முழுமையாக இந்த நூலை அலங்கரிக்கின்றன. ஒரு காலத்தைப் பதிவு செய்யும் ஒரு வரலாற்று ஆவணமாக இந்த நூலைப் பார்க்க முடியும். அரங்கியல் கற்கும் மாணவர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம் இந்நூல்.
இந்த நூலில் விவாதிக்கப்படும் அரங்கம், திரைப்படம், வானொலி போன்ற விஷயங்கள் மாணவர்களுக்கு பயன்படும் .
நவீன நாடகத் துறையில் தீவிரமாக இயங்கிய காலங்களில் அனுபவ செறிவுடன் பாலேந்திரா அரங்கு பற்றி எழுதிய கருத்துக்கள் இன்றும் பொருந்தும் என்கிறார் பிரபலமான இந்திய நாடக ஆளுமை இந்திரா பார்த்தசாரதி.
"இலங்கையில் தமிழ் நாடக வரலாறு குறித்த பதிவுகள் சரியாக இல்லை என்ற குரல் உரக்க ஒலித்த வண்ணமே உள்ளது .இதனால் இதில் சம்பந்தப்பட்டு உழைத்தவர்கள் தமது முயற்சிகளைப் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகிறது.
ஒவ்வொரு முறையும் இலங்கை சென்று திரும்பும்போது அல்லது இலங்கையில் இணையவழியில் நடக்கும் நாடகக் கருத்தரங்குகளில் பங்குபற்றும் போது எமது நாடக நடவடிக்கைகளை ஆவணப்படுத்த வேண்டும் என்ற தேவை அதிகரிப்பதை உணர்கிறேன். உண்மைகளைத் திரிபுபடுத்தாமல், நடந்ததை நடந்தபடியே ஆதாரங்களுடன் காலக்கிரமப்படி ஆவணப்படுத்துவது மிக முக்கியமாகும்." என்று குறிபிட்டுள்ளார் பாலேந்திரா.
‘பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்’ என்ற தலைப்பின் கீழ் நான்கு உப தலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
மேடைப் பிரச்சினைகள், நாடக சர்ச்சை, பாலேந்திரா தமிழுக்கு அறிமுகப் படுத்திய பிற மொழி நாடகாசிரியர்கள், புலம் பெயர் நாடக அனுபவங்கள் ஆகிய பிரிவுகளில் கட்டுரைகள் உள்ளன. நவீன நாடகம் தொடர்பான பல அம்சங்கள் இந்த நூலில் விவாதிக்கப்படுகின்றன.
கடந்த நான்கு தசாப்தங்களாக லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் பாலேந்திரா,
இலங்கையில் பத்து வருடங்கள் 1972-1982 காலப் பகுதியில் மிக தீவிரமான அரங்க செயற்பாடுகளை மேற்கொண்டு நூற்றுக்கு மேற்பட்ட ஆற்றுகைகளை இலங்கையின் பல பாகங்களிலும் நிகழ்த்தினார். இலங்கையில் ‘நாடகமும் அரங்கியலும்’ பயிலும் மாணவர்களது பாடத்திட்டத்தில் அவரது முயற்சிகளைப் பற்றி ஓரளவு உண்டு. எனினும் முழுமையாக இல்லை.
ஆக நூல் ஆசிரியரின் அரங்க செயற்பாடுகள் பற்றி அறிய நூல் அறிமுக நிகழ்வுக்கு வந்து பயன்பெறுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM