இந்தோனேசியா நாட்டில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்தோனேசியா நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்திம் டிமிக்கா என்ற இடத்தில் இருந்து வாமெனா என்ற இடத்தை நோக்கி இன்று காலை உணவுப் பொருட்களை ஏற்றிச்சென்ற ‘ஹெர்குலஸ் சி-130’ ரக விமானம் மோசமான வானிலை காரணமாக தரையில் விழுந்து நொறுங்கியது.

இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் இருந்த 3 விமானிகளும், 10 இராணுவ வீரர்களும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.