ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

Published By: Devika

04 Jan, 2023 | 01:03 PM
image

ழங்காலத்தில் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க பல்வேறு பழக்கங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வந்தன. அதில் ஒன்று தான் ஆயில் புல்லிங். பழங்காலத்தில் பல் சொத்தை, ஈறுகளில் இரத்தக் கசிவு, தொண்டை வறட்சி, உதடு வெடிப்பு மற்றும் பற்கள், ஈறுகளை வலுவாக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆயுர்வேதத்தில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற ஆயில் புல்லிங் பரிந்துரைக்கப்படுகிறது.

 

ஆயில் புல்லிங் செய்வதற்கு எந்த எண்ணெய் நல்லதாக இருக்கும் என்று நீங்கள் கேட்கலாம். ஆயில் புல்லிங் செய்ய எந்த எண்ணெய்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் அனைவரது வீட்டிலும் இருக்கும் தேங்காய் எண்ணெய் கொண்டே ஆயில் புல்லிங் செய்யலாம்.

 

ஏனெனில் தேங்காய் எண்ணெய் எளிதில் உடலால் உறிஞ்சக்கூடியது. இதில் நல்லெண்ணெயை விட ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறைவாக உள்ளது. மேலும் இது மற்ற எண்ணெய்களை விட சுவையானது. முக்கியமாக இதிலுள்ள லாரிக் அமிலம், ஆன்டி-பக்டீரியல் மற்றும் ஆன்டி-வைரல் பண்புகளை கொண்டுள்ளது. இது தவிர தேங்காய் எண்ணெயில் உள்ள கேப்ரிலிக் அமிலம் ஒரு சக்தி வாய்ந்த பூஞ்சை எதிர்ப்பு பொருளாகும். இப்போது தினமும் தேங்காய் எண்ணெய் கொண்டு ஆயில் புல்லிங் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

 

பற்குழியை சுத்தம் செய்கிறது

தேங்காய் எண்ணெயால் ஆயில் புல்லிங் செய்யும் போது, அது பற்குழியில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் இது உடலிலிருந்து பக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளை வெளியேற்றி, பக்டீரியாக்களின் சுமையைக் குறைக்கிறது.

 

பல் சொத்தையைக் குறைக்கிறது

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல் சொத்தையால் பாதிக்கப்படுகின்றனர். சொத்தை பல் கடுமையான பல் வலி மற்றும் பல் இழப்பை ஏற்படுத்தும். பற்கள் சொத்தையாவதற்கு ஸ்ட்ரெப்டோகாக்கஸ் மியூட்டன்ஸ் என்ற பக்டீரியா ஆகும். தேங்காய் எண்ணெயில் உள்ள லாரிக் அமிலம் இந்த பக்டீரியாவை திறம்பட அகற்ற உதவுகிறது. இதன் விளைவாக பற்கள் சொத்தையாவது குறைகிறது.

 

வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும்

வாய் துர்நாற்றமானது சொத்தை பற்களில் உள்ள கெமிக்கல்கள் மற்றும் வாயுக்களால் ஏற்படுகிறது. தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது சொத்தை பற்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து வெளியேற்றி, வாய் துர்நாற்றத்தைத் தடுக்கிறது.

 

ஈறு நோய்களை சரிசெய்கிறது

பற்களில் பக்டீரியாக்கள் குவியும் போது, அது ஈறு நோய்களை உண்டாக்குகிறது. ஆனால் ஆயில் புல்லிங் தினமும் செய்யும் போது, அது பற்கள் மற்றும் ஈறுகளுக்குள் ஆழமாக சென்று, பக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளை அகற்ற உதவி புரிகிறது. இதன் விளைவாக ஈறு நோய்களின் அபாயம் குறைகிறது.

 

பற்களை வெண்மையாக்கும்

தேங்காய் எண்ணெய் கொண்டு தினமும் ஆயில் புல்லிங் செய்யும் போது, அது பற்களில் படிந்துள்ள கிருமிகள் மற்றும் மஞ்சள் படலத்தை நீக்கி, இயற்கையாக பற்களை வெண்மையாக்குகிறது. மேலும் இது பற்களை பளபளப்பாகவும் பராமரிக்க உதவுகிறது. எனவே உங்கள் பற்கள் மஞ்சள் நிறத்தில் அசிங்கமாக இருந்தால், ஆயில் புல்லிங்கை முயற்சி செய்யுங்கள்.

 

ஆயில் புல்லிங் செய்வது எப்படி?

* காலையில் எழுந்ததும் 1-2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயை வாயில் ஊற்றி, நன்கு 10 நிமிடம் கொப்பளிக்க வேண்டும்.

 * பின் கொப்பளித்த எண்ணெயை துப்ப வேண்டும். அப்போது எண்ணெயானது வெள்ளை நிறத்தில் காணப்படும்.

 * பின்பு குளிர்ந்த நீரால் ஒருமுறை வாயைக் கழுவ வேண்டும்.

 * பிறகு ஃப்ளூரைடு உள்ள டூத் பேஸ்ட் கொண்டு பற்களைத் துலக்க வேண்டும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்