அம்பானியும், அதானியும் இந்த தேசத்தில் தலைவர்களை, ஊடகங்களை விலைக்கு வாங்கியிருக்கலாம்; ஆனால், அவர்களால் என் சகோதரரை விலைக்கு வாங்க முடியாது" என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறினார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்திவருகிறார். இந்த யாத்திரை இன்று உத்தரப் பிரதேசத்தில் நுழைந்தது. உத்தரப் பிரதேசத்தின் லோனியில் யாத்திரையை பிரியங்கா காந்தி வரவேற்றார். அப்போது பேசிய அவர், "எனது சகோதரர் ஒரு போராளி. நான் அவரை நினைத்து மெருமைப்படுகிறேன். இதுவரை அவர் 3000 கி.மீ யாத்திரை மேற்கொண்டிருக்கிறார்.
அம்பானியும், அதானியும் இந்தியத் தலைவர்களை விலைக்கு வாங்கியிருக்கலாம். பொதுத்துறை நிறுவனங்களையும் ஊடகங்களையும் விலைக்கு வாங்கியிருக்கலாம். ஆனால் அவர்களால் என் சகோதரரை விலைக்கு வாங்க முடியவில்லை. அவ்வாறு வாங்கவும் முடியாது. வெறுப்பு அரசியலும், பிரிவினை அரசியலும் நீடித்தால் மக்கள் பிரச்சினை தீராது. உங்கள் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீராது.
நாட்டின் பொருளாதாரம் முன்னேறாது.என் சகோதரரின் மாண்பை சிதைக்க இந்த அரசாங்கம் கோடி கோடியாக செலவழித்தது. ஆனால் அவர்களால் அதை செய்ய முடியவில்லை. எனது சகோதரர் உண்மையின் பாதையில் நடக்கிறார். இந்த யாத்திரையில் கலந்து கொள்ளும் அனைவரும் உங்களுடன் ஒற்றுமையின், அன்பின், மரியாதையின் செய்திகளை நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துச் செல்லுங்கள்." என்றார்.
"
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM