மாஸ்டிடிஸ் எனும் மார்பக திசு வீக்கப் பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Ponmalar

04 Jan, 2023 | 12:17 PM
image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு அவர்களது தாய்மார்கள், தாய்ப்பால் ஊட்டுவது இயல்பான செயல் மட்டுமல்ல ஆரோக்கியமான செயலும் கூட. மருத்துவ நிபுணர்கள் குழந்தை அழும் போதெல்லாம் தாய்ப்பாலை கொடுக்க வேண்டும் என தாய்மார்களுக்கு அறிவுறுத்தி இருப்பார்கள். இந்நிலையில் சில பெண்களுக்கு பாலூட்டும் போது அவர்களது மார்பகத்தில் அழற்சி எனப்படும் திசு வீக்க பாதிப்பு உண்டாகிறது. இதனை மருத்துவர்கள் மாஸ்டிடிஸ் என வகைப்படுத்துகிறார்கள்.

குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்மணிகளை மட்டுமல்லாமல், தாய்ப்பால் வழங்காத பெண்களுக்கும் இத்தகைய மார்பக திசு வீக்க பாதிப்பு ஏற்படக்கூடும். இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால், பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்ட இயலாத நிலை உண்டாகக்கூடும். இதனால் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டவுடன் மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெற வேண்டும்.

பொதுவாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் அவர்களின் மார்பகம் இயல்பான அளவிட கூடுதலாக வெப்பத்துடனும், வீக்கத்துடனும், வலியடனும் காணப்படும். மேலும் தாய்ப்பால் புகட்டும் போது வலி அல்லது எரிச்சல் ஏற்படலாம். மேலும் அப்பகுதியின் தோல் சிவந்தும் இருக்கும். சில பெண்மணிகளுக்கு இதன் போது காய்ச்சலும் ஏற்படக்கூடும்.

இத்தகைய அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பொதுவாக தோல்களினூடாக ஊடுருவும் இரண்டு வகையான பக்டீரியாக்களின் காரணமாகத்தான் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. வேறு சிலருக்கு தாய்ப்பாலை சுரக்கும் நாளங்கள் அல்லது குழாய்களில் அடைப்பு அல்லது பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம். பரிசோதனையில் எத்தகைய பக்டீரியாக்களால் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானித்த பின், வலி நிவாரணிகளை வழங்கி, பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள். மேலும் இத்தகைய பாதிப்பினை தொடக்க நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

டொக்டர் தீப்தி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04