- ஜவ்பர்கான்

இளைஞர் பாராளுமன்றத்திற்கென நாடளாவிய ரீதியில் 225 பேரை தெரிவுசெய்வதற்காக 945 பேர் போட்டியிடுகின்றனர். 670 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறும் இத்தேர்தலில் 332701 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் இத்;தேர்தல் நடைபெறுகிறது. 

இந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 45 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுவதாக மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.எல்.எம்.என்.நைறூஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்புத் தொகுதியிலிருந்து 14 பேரும்  கல்குடாத் தொகுதியிலிருந்து 20 பேரும் பட்டிருப்புத் தொகுதியிலிருந்து 11 பேரும் வேட்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இத்தேர்தலில் வாக்களிப்பதற்காக மட்டக்களப்புத் தொகுதியில் 6,185 பேரும் கல்குடாத் தொகுதியில் 5,355 பேரும் பட்டிருப்புத் தொகுதியில் 4,456 பேருமாக மொத்தம் 15,996 இளைஞர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் 21 வாக்கெடுப்பு நிலையங்களில்  வாக்களிப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.