இத்தாலியன் ஹொட் சொக்லெட் டிரிங்க் மிக்ஸ்

Published By: Ponmalar

04 Jan, 2023 | 11:24 AM
image

தேவையான பொருட்கள்: 

கொக்கோ பவுடர் - 1 கப் 

சர்க்கரை - 1 கப் 

சோள மா - 2 டேபிள் ஸ்பூன் 

பால் பவுடர் - 4 டேபிள் ஸ்பூன் 

டார்க் சொக்லெட் (துருவியது) - ½ கப் 

செய்முறை: 

அனைத்துப் பொருட்களையும் ஈரமில்லாத அகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். 

இப்போது 'சொக்லெட் டிரிங்க் மிக்ஸ்' தயார். 

இதனை ஈரப்பதம் இல்லாத சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு, காற்று புகாதவாறு இறுக்கி மூடவும். 

இந்த பவுடரை குளிர்பதனப் பெட்டியில் வைத்து 6 மாதம் வரை பயன்படுத்தலாம். 

ஒரு கப் சூடான பாலில் 2 டீஸ்பூன் சொக்லெட் டிரிங்க் பவுடரை, கட்டியில்லாமல் கலக்கி பரிமாறலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்