யாழில் காணொளியை காட்டி யுவதி துஷ்பிரயோகம் : பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

Published By: Digital Desk 2

04 Jan, 2023 | 10:52 AM
image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பகுதியில் யுவதியொருவரை 2 வருட காலமாக தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (ஜன.03) கைது செய்யப்பட்டுள்ளார்.

பருத்தித்துறை பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர்  17 வயதான பெண் (தற்போது 19 வயது) ஒருவரை நிவாரணம் தருவதாக அழைத்துச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி, அதனை காணொளி பதிவுகளை எடுத்து, காணொளியை கட்டி மிரட்டி கடந்த இரண்டு வருட காலமாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்த நிலையில், குறித்த பெண் கடந்த வாரம் சுகயீனமடைந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சையின் போது, பாலியல் துஷ்பிரயோககுட்படுத்தப்பட்டு வந்தமை கண்டறியப்பட்ட நிலையில், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, பொலிஸ் உத்தியோகஸ்தர் தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி வந்தமை தெரியவந்ததையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்து வந்த பருத்தித்துறை பொலிஸார், பொலிஸ் உத்தியோகஸ்தரை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனர். 

கைதுசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

2024-06-12 20:14:05
news-image

தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை...

2024-06-12 19:40:39
news-image

யாழ். கல்வி வலயங்களுக்கு முன்பாக கவனயீர்ப்பு...

2024-06-12 19:11:58
news-image

பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த மேலும்...

2024-06-12 19:42:31
news-image

போதைப்பொருட்களுடன் 13 பெண்கள் உட்பட 813...

2024-06-12 20:13:13
news-image

சித்தார்த்தன் – அநுரகுமார விசேட சந்திப்பு

2024-06-12 17:24:17
news-image

மட்டக்களப்பில் சம்பள முரண்பாட்டை தீர்க்கக் கோரி...

2024-06-12 18:19:27
news-image

சம்பளம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ...

2024-06-12 17:09:49
news-image

வேன் - பஸ் மோதி விபத்து...

2024-06-12 17:04:32
news-image

நுவரெலியாவிலும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் போராட்டம் 

2024-06-12 16:56:26
news-image

நினைவேந்தல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர்...

2024-06-12 17:06:23
news-image

நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு சஜித்...

2024-06-12 16:53:57