15 வருடங்களுக்கு பின்னர் அன்டனோவ்-32 வழக்கு 

Published By: Raam

29 Dec, 2015 | 10:28 AM
image

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் 2000ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் திகதி வில்பத்து சரணாலயத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்ட அன்டனோவ்-32 விமானம் தொடர்பான வழக்கை, ஜனவரி 12ஆம் திகதி முதல் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

பலாலியிலிருந்து இரத்மலானைக்கு பயணித்துகொண்டிருந்த அன்டனோவ்-32 வில்பத்துவ சரணாலயத்தில் வைத்து தமிழீழ விடுதலைப்புலிகளின் மிஷேல் (எறிகணை) தாக்குதலில் தலாவ வீரவெள பிரதேத்தில் சுட்டுவீழ்த்தப்பட்டது. 

இவ்விமான விபத்தில் ரஷ்யா விமானி மற்றும் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 31 பேர் பலியாகினர். இந்த சம்பவம், தொடர்பான சந்தேகநபர்களான யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இராசதுரை ஜெகன் மற்றும் நல்லாம் சிவலிங்கம் ஆகிய இருவரையும் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் எறிகணை படையணியின் உறுப்பினர்கள் இருவரையும் ஜனவரி 12 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

அநுராதபுர விசேட மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா ஸ்வரணாதிபதியே மேற்கண்ட கட்டளையை நேற்று திங்கட்கிழமை பிறப்பித்தார். 

சம்பவம் இடம்பெற்று 15 வருடங்களுக்கு பின்னர், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51