பாகிஸ்தானில் சிலிண்டர் தட்டுப்பாடு ; பொலித்தீன் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் மக்கள்

Published By: Digital Desk 3

04 Jan, 2023 | 09:15 AM
image

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பொலித்தீன் பைகளில் எரிவாயு  நிரப்பி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

பாகிஸ்தானில் வீடுகளில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் உற்பத்தி போதிய அளவு இல்லாததால் சிலிண்டருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதோடு எரிவாயு சிலிண்டரின் விலையும் அதிகரித்து வருகிறது. 

இதனால் எரிவாயு சிலிண்டர் விற்பனையாளர்கள் விநியோகத்தை வெகுவாக குறைத்துள்ளனர். இதன் விளைவாக அந்த நாட்டு மக்கள் சிலிண்டர்களுக்கு பதிலாக பொலித்தீன் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அங்குள்ள கைபர் பக்துங்வா மாகாணத்தில் மக்கள் இவ்வாறு பொலித்தீன் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் வீடியோ மற்றும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து, இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 

எரிவாயு விற்பனை நிலையங்களில் பொலித்தீன் பைகளில் 3 அல்லது 4 கிலோ எரிவாயு நிரப்ப சுமார் ஒரு மணிநேரம் ஆகிறது என்றும் எரிவாயு நிரப்பிய பைகளை வால்வு பொருத்தி இறுக்கமாக மூடிக்கொடுக்கிறார்கள் என்றும் அந்நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. 

பொலித்தீன் பைகளில் எரிவாயு நிரப்பி செல்லும் மக்கள் அதில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய சிறிய உறிஞ்சு குழாயை பொருத்தி பயன்படுத்துவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே பொலித்தீன் பைகளில் எரிவாயு நிரப்பி செல்வது கையில் வெடிகுண்டு எடுத்து செல்வதற்கு சமம் என்றும், இதனால் மிகவும் மோசமான விபத்துகள் நிகழும் அபாயம் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த பொலித்தீன் பைகளால் காயமடைந்து 8 நோயாளிகள் பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழகத்தின் தீக்காய பராமரிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52