(செய்திப்பிரிவு)
இந்தியக் குடியரசுத் தலைவரால் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கெளரவமாக 17 ஆவது பிரவசி பாரதீய சம்மான் விருது காணப்படுகிறது. இந்த கௌரவத்தை இவ்வருடம் தனதாக்கிய குமார் நடேசனின் பன்முக சமூக சேவை இந்தியாவின் தேச நலனைப் போலவே இலங்கையின் தேச நலனிலும் குறிப்பிடத்தக்க துறைசார் பங்களிப்பை நல்கி இருக்கும் என நம்புவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ,
ஜனநாயக கட்டமைப்பிற்குள் ஏற்றுக்கொள்ளத்தக்க சேவை ஊடாக மூலோபாய நலன்களுடன் எவ்வாறு ஆளுமையை தகவமைப்பதென்பதற்கு குமார் நடேசன் ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
புலம்பெயர் சமூகத்தினரின் தேசிய பங்கேற்புக்கு குமார் நடேசன் சிறந்த உதாரணமாவார்.
இந்திய-இலங்கை நட்புறவுக்கு முந்தைய அனுபவங்களுடன் மேலும் ஆழமான உறவுகளை நிலைப்படுத்த இது அவருக்கு கிடைத்த மகத்தான சந்தர்ப்பம் என கருதுகிறேன்.
புகழ்ச்சிகளை எதிர்பாராது தன்னார்வ ரீதியாக பல்வேறு சமூக சேவைகளையாற்றிவரும் குமார் நடேசனின் சமூக, நாடு மற்றும் சர்வதேச பார்வைகள் மேன்மேலும் விரிவுபட்டு புதிய மூலோபாயங்களுடன் பங்களிப்பை நல்க மனதார வாழ்த்துகிறேன்.
பல்வேறு மட்டங்களைக் கொண்ட சமூக சேவையின், தன்னார்வ சேவையின் இயக்க ஆற்றலை நுணுக்கமாக அடையாளம் கண்டு புதிய பெறுமானங்களை சேர்ப்பதில் மேலும் உயர்ச்சி பெற வாழ்த்துகிறேன்.
கிடைக்கும் சந்தர்ப்பங்களின் முழுமையான ஆற்றலை தவறவிடக்கூடாது என்பதில் கரிசனையோடு செயற்படும் உங்களுக்கு கிடைத்துள்ள விருதை பல்கலாசார விழுமியங்களை கைவிட முடியாத ஐக்கிய இலங்கையும் அபிமானம் கொள்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM