குளியாப்பிட்டி - தும்மலசூரிய பகுதியில் 15 இலட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த  இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நேற்று இரவு பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து கட்டாருக்கு கொண்டு செல்லப்படவிருந்தாக 140 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், குறித்த ஹெரொயினை கொண்டுசெல்ல பயன்படுத்தப்பட்ட வேன் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கொழும்பு - ஜம்பட்டா வீதியில் இருந்து குறித்த ஹெரோயின் போதைப்பொருள் கடத்தப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்கள் தும்மலசூரிய, ஜம்பட்டா வீதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.