(எம்.எப்.எம்.பஸீர்)
பேலியகொடையில் அமைந்துள்ள, ' மஹ நெகும ' பிரதான அலுவலகத்தில் அதன் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகியோர் மீது, பாற்சோறு மற்றும் பலகாரங்களால் நடாத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதல்கள் தொடர்பில் நால்வரை பேலியகொடை பொலிசார் கைதுச் செய்துள்ளனர்.
'மக நெகும' திட்டத்தின் ஊழியர்கள் நால்வரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (ஜன. 03) அனுமதியளித்தது.
அதன்படி கைதான நால்வரின் 1, 4 ஆம் சந்தேக நபர்களை தலா 3 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும், 2,3 ஆம் சந்தேக நபர்களை தலா 3 இலட்சம் பெறுமதியான ஒரு சரீரப் பிணையிலும் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதிவான் கேமிந்த பெரேரா உத்தரவிட்டார்.
பெலி அத்த பகுதியைச் சேர்ந்த கங்கானம்கே சுதர்ஷன குமார், சுனில் ஷாந்த , பாணந்துறையைச் சேர்ந்த அஜித் பத்மகுமார, பூகொடையைச் சேர்ந்த துஷார நுவன் ஷாமர ஆகியோரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டவர்களாவர்.
நேற்று 2 ஆம் திகதி, புது வருட சம்பிரதாயபூர்வ நிகழ்வுகள் பேலியகொடை - மக நெகும அலுவலகத்திலும் நடந்துள்ளது. இதன்போது மங்கள விளக்கேற்ற அத்திட்டத்தின் தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகியோர் தயாரான போது, அவர்களது நிர்வாக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஊழியர்கள் அங்கிருந்த பலகாரங்கள், பாற்சோறு கொண்டு தாக்குதல் நடாத்தியுள்ளனர்.
இது தொடர்பில் முன் வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமையவே பேலியகொடை பொலிசார் சந்தேக நபர்கள் நால்வரைக் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM