20 வருடங்களில் 1,668 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர்

Published By: Sethu

03 Jan, 2023 | 04:40 PM
image

கடந்த 20 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 1,668 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

2003 முதல் 2022 வரையான காலத்தில் 1,668 ஊடகவியாலளர்கள் கொல்லப்பட்டுள்ளர்.  இக்காலப்பகுதியில் வருடாந்தம் சராசரியாக 80இற்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என பாரிஸ் நகரை தளமாகக் கொண்ட என எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (RSF)  கடந்த வார இறுதியில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டிலிருந்து நோக்கினால் இந்த எண்ணிக்கை 1,878 ஆக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2003 முதல் 2022 வரையான 20 வருட காலத்தில் ஈராக் மற்றும் சிரியா ஆகியன ஊடகவியலாளர்களுக்கு மிக ஆபத்தான நாடுகளாகியுள்ளன. இவ்விரு நாடுகளிலும் கடந்த 20 வருடங்களில் மொத்தமாக  578 ஊடகவியலாளர்கள் கொல்ப்பட்யுடுள்ளனர்.

அவற்றுக்கு அடுத்ததாக, மெக்ஸிகோ (125), பிலிப்பைன்ஸ் (107), பாகிஸ்தான் (93), ஆப்கானிஸ்தான் (81), சோமாலியா (78) ஆகிவற்றில் அதிக எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

சிரிய யுத்தம் காரணமாக 2012 மற்றும் 2103 ஆகியன மிக இருண்ட வருடங்களாக இருந்துள்ளன என ஆர்எஸ்எவ் தெரிவித்துள்ளது. 2012 ஆம் அண்டு 144 ஊடகவியலாளர்களும் 2013 ஆம் ஆண்டில் 142 ஊடகவியலாளர்களும் உயிரிழந்துள்ளனர்.

தென்பின் இந்த எண்ணிக்கை குறைவடைந்து வந்து, 2019 ஆம் ஆண்டின் பின் வரலாற்று ரீதியாக மிகக் குறைவாக இருந்தது. எனினும், 2022 ஆம் ஆண்டு எந்த எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது. யுக்ரைன் யுத்தம் இதற்கு பகுதியளவு காரணமாகும்.

2022 இல் 58 ஊடகவியலாளர்கள்  அவர்களின் பணிகளை செய்தமைக்காக கொல்லப்பட்டனர். 2021ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 51 ஆக இருந்தது' என ஆர்எஸ்எவ். நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரியில் ரஷ்ய படையெடுப்பு ஆரம்பமான பின்னர் யுக்ரைனில் 8 ஊடகவியாளர்கள் கொல்லப்பட்டனர். முந்தைய 19 வருடங்களில் அங்கு 12 ஊடகவியலாளர்களே கொல்லப்பட்டனர். ரஷ்யாவில் கடந்த 20 வருடஙகளில் 25 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆசியாவில் பிலிப்பைன்ஸுக்கு அடுத்ததாக பாகிஸ்தான் (93), இந்தியா (58) ஆகியவற்றில் அதிக எண்ணிக்கையான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த 20 வருடங்களில் கொல்லப்பட்ட ஊடவியலாளர்களில் 4.86 சதவீதமானோர் பெண்கள். இக்காலப்பகுதியில் 81 பெண் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2012 ஆம் ஆண்டிலிருந்து 52 பெண் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2017 ஆம் ஆண்டில் 10 பெண் ஊடகவியலளார்கள் கொல்லப்பட்டனர் எனவும் எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47