(எம்.மனோசித்ரா)
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொள்கை தயாரிப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் , மின் சக்தி அமைச்சர் என்ற ரீதியில் காஞ்சன விஜேசேகரவும் இவ்வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டண அதிகரிப்பிற்கான யோசனையை முன்வைத்த போதிலும் , அது தொடர்பில் மதிப்பாய்வு செய்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் இறுதி முடிவினை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு செவ்வாய்கிழமை (03) இடம்பெற்ற போது அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவையில் நீண்ட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. கொள்கை தயாரிப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , மின் சக்தி அமைச்சர் என்ற ரீதியில் காஞ்சன விஜேசேகர திருத்தப்பட்ட மின் கட்டணம் குறித்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்தனர். அதனை மேலும் மீளாய்வு செய்து , அதற்கான அனுமதியை வழங்குவது தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என்றார்.
தற்போது சாதாரண மின் பாவனைக்கான கட்டணங்கள் பாவிக்கப்படம் அலகுகளின் அடிப்படையிலேயே அறவிடப்படுகின்றன.
அதாவது 0 - 30 க்கு இடைப்பட்ட அலகுகளைப் பயன்படுத்துவரோருக்கு ஒரு அலகொன்றுக்கு 120 ரூபாவும் , 31 - 60 க்கு இடைப்பட்ட அலகுகளைப் பயன்படுத்துவோருக்கு அலகொன்றுக்கு 240 ரூபாவும் , 61 - 90 க்கு இடைப்பட்ட அலகுகளைப் பயன்படுத்துவோருக்கு அலகொன்றுக்கு 360 ரூபாவும் , 91 - 120 க்கு இடைப்பட்ட அலகுகளைப் பயன்படுத்துவோருக்கு அலகொன்றுக்கு 960 ரூபாவும், 121 - 180 க்கு இடைப்பட்ட அலகுகளைப் பயன்படுத்துவோருக்கு அலகொன்றுக்கு 960 ரூபாவும் , 181 அலகுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு அலகொன்றுக்கு 1500 ரூபாவும் அறவிடப்படுகிறது.
இந்த கட்டணங்களை முறையே 550 ரூபா, 650 ரூபா, 1500 ரூபா, 1500 ரூபா மற்றும் 2000 ரூபாவாக அதிகரிப்பதற்கான யோசனையே தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் மாத்திரம் 275 சதவீதத்தினால் மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது இதனை விடவும் அதிகரிபபதற்கான யோசனைகளே முன்வைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறிருப்பினும் அரசாங்கத்தின் இந்த யோசனைக்கு இலஙகை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, மகா சங்கத்தினர் உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் எதிர்ப்புக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM