ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் பிறந்த ஒஸ்திரியா இல்லம் தற்போது ஊனமுற்றோரை பராமரிக்கும் நிலையமாக மாறியுள்ளது.

1889 ஆம் ஆண்டு ஒஸ்திரிய - ஜேர்மன் எல்லை பகுதியிலுள்ள பிரேனவு நகரத்தில் ஹிட்லர் பிறந்து தனது மூன்று வயதுவரை அங்கு வசித்துள்ளார். 

அவ்வீட்டை அரசுடமையாக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஒஸ்திரிய அரசானது கட்டிடத்தின் உரிமையாளர் ஜெர்லின்ட் பூமருடன் பல வருடங்களாகவே உடன்படாதமைக்காக பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒஸ்திரிய பாராளுமன்றில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தில் குறித்த கட்டிடத்தை பலவந்தமாக ஆக்கிரமிப்பதற்கான அனுமதியை அந்நாட்டு அரசியல் தலைவர்கள் வழங்கியுள்ளனர்.

நாஸிஸ கொள்கை   பற்றாளர்கள் ஒவ்வொரு வருடமும் குறித்த கட்டிடத்திற்கு சென்று ஹிட்லரை நினைவு கூர்வதால், குறித்த கட்டிடத்தை அழிக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் தெரிவித்து வந்துள்ளனர். 

இந்நிலையில் நாஸிஸ ஆட்சியில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு பராமரிப்பு இடமாக மாற்றி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதோடு, நாஸிஸவாதிகள் மீதான வெறுப்புணர்வை இல்லாது செய்ய அந்த கட்டிடத்தை தொடர்ந்து ஊனமுற்றோர் பராமரிப்பு நிலையமாக நடத்துவதற்கும் உள்ளுர் அரசியல் தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.