ஏழில் குரு இருந்தால் ஏற்படும் திருமண தடையும்.... பரிகாரமும்...

Published By: Ponmalar

03 Jan, 2023 | 04:13 PM
image

ஏழில் அமர்ந்த குரு லக்னத்தை பார்க்கும் என்பதால் அது பெரிய பாதிப்பைத் தராது. சிலருக்கு கால தாமதமாக திருமணம் நடக்கும். பலருக்கு திருமணத்திற்கு பின்பே பிரச்சினையை ஏற்படுத்துகிறது. 

குறிப்பாக மேஷ லக்னத்திற்கு ஏழாமிடமான துலாத்தில் நிற்கும் குருவும், மகர லக்னத்திற்கு ஏழாமிடமான கடகத்தில் உச்சம் பெறும் குருவும் காலதாமதம் மற்றும் பிரிவினையைத் தருகிறது. கடக லக்னத்திற்கு ஏழில் வக்ரம் பெற்ற குருவும் திருமணத்தில் தடை அல்லது திருமணத்திற்கு பின் பிரிவினையைத் தருகிறது. 

ஏழில் நின்ற குரு லக்னத்தைப் பார்ப்பதால் பிரச்சினை இருந்தாலும் கெளரவத்திற்காக பிரியாமல் விட்டுக் கொடுக்காமல் வாழ முயற்சிக்கிறார்கள். பெண்கள் ஜாதகத்தில் குரு செவ்வாயுடன் சேருவதோ அல்லது செவ்வாயைப் பார்ப்பதோ சிறப்பு. 

ஆண்கள் ஜாதகத்தில் குரு சுக்கிரனை பார்ப்பதோ அல்லது சுக்கிரனுடன் சேர்வதோ சிறப்பு அல்லது தம்பதிகளின் ஜாதகத்தில் ஏழாம் அதிபதியுடன் சேர்வதோ அல்லது ஏழாம் அதிபதியை பார்ப்பதோ சிறப்பு. மேற்கண்ட எந்த நிலையும் இல்லாத போது திருமண வாழ்க்கை கடமைக்காக வாழ்வது போல் இருக்கும். 

திருமணத்திற்குப் பின் குழந்தை இல்லாத காரணத்தால் ஏற்படும் பிரிவினைகளுக்கு குரு முக்கிய காரணமாகிறது குழந்தை நல்ல நிலையில் உருவாக காரணமாக குரு இருப்பதால் குழந்தை பிறக்காமல் இருத்தல் அல்லது குழந்தையை வளர்க்க முடியாமை போன்ற காரணங்களால் பிரிவினை ஏற்படுகிறது. நம்பிக்கை, நாணயத்திற்கு காரக கிரகம் குருவாகும். ஒருவருக்கு மற்றவர் மேல் நம்பிக்கை, நாணயம் குறைவதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் காரணமாகிறது. கருக்கலைப்பு மற்றும் குரு துரோகம் செய்தவர்களுக்கும் இது போன்ற வினைப் பதிவு இருக்கும். 

பரிகாரம் 
16 வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி, மஞ்சள் வஸ்திரம் அணிவித்து வாசனை மலர்களால் அர்ச்சித்து 16 நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். 

16 அந்தணர்களுக்கு 16 வாரம் சமைக்கத் தேவையான உணவுப் பொருட்கள் வழங்க வேண்டும். முருகனை வழிபட வேண்டும். வசதியற்றவர்களின் திருமணத்திற்கு தாலிக்கு பொன் தானம் தர வேண்டும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வாஸ்து தோஷமற்ற காலி காணி வாங்குவதற்கான...

2026-07-18 16:01:41
news-image

ஆடி மாதம் என்ன செய்யலாம்?

2026-07-17 16:06:56
news-image

தனவந்தராக வளர்வதற்குரிய சூட்சம குறிப்பு..!

2026-07-16 17:17:34
news-image

வாராகி அம்மனின் அருள் கிடைப்பதற்கான விசேட...

2026-07-15 15:02:03
news-image

கணவன் - மனைவி இடையேயான கருத்து...

2026-07-14 17:26:25
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக வழிபாடு!

2026-07-13 17:20:07
news-image

கர்மா தொடர்பான கெடுபலன் குறைவதற்கான எளிய...

2026-07-11 16:58:36
news-image

தடையற்ற வருவாய் கிடைப்பதற்கான எளிய வழிமுறை..!

2026-07-10 15:21:24
news-image

நினைத்ததை சாதிக்கும் வல்லமை வழங்கும் சூட்சம...

2026-07-09 18:36:55
news-image

அரசாங்க பணி கிடைப்பதற்கான சூட்சம வழிபாடு..!?

2026-07-08 14:58:00
news-image

வாராகி அம்மனுக்குரிய பிரத்யேக தீப வழிபாடு

2026-07-07 17:13:45
news-image

தொழிலில் வெற்றி பெறுவதற்கான பிரத்யேக குறிப்பு..!

2026-07-06 15:19:29