குழந்தை உயிரிழப்பு ; வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் போராட்டம்

Published By: Digital Desk 3

03 Jan, 2023 | 02:12 PM
image

சுகவீனமுற்றிருந்த சிறுவனை வீதி சீராக இல்லாமையால் உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல  முடியாமல் உயிரிழந்தையை கண்டித்து அட்டன் வெளிஓயாவில் போராட்டம் ஒன்று இன்று செவ்வாய்க்கிழமை (03) இடம் பெற்றுள்ளது.

விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, எமக்கான வீதியை புனரமைத்து தராமல், அரசியல் வாதிகள் எவரும் ஊர் பக்கம் வரக்கூடாது. அவ்வாறு வந்தால் அடித்து விரட்டுவோம் என அட்டன், வெளிஓயா  22 ஆம் தோட்ட பகுதி மக்கள் எச்சரித்துள்ளனர்.

அட்டன், வெளிஓயா 22 ஆம் இலக்க தோட்டத்தில் உள்ள 4 வயது சிறுவன் ஒருவர் நேற்று (02) உயிரிழந்துள்ளார். 

சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவனை, உரிய நேரத்துக்கு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்வதற்கு வாகனம் இருக்கவில்லை. வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் வெளியில் இருந்துகூட வாகனத்தை பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுகவீனமுற்றிருந்த குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையிலேயே இதற்கு மேலும் மக்கள் சாவதற்கு இடமளிக்க முடியாது எனவும், வீதியை உடன் புனரமைத்து தருமாறு வலியுறுத்தியும் தோட்ட மக்கள் இன்று செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறார்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றனர்.

சுமார் 2 கிலோ மீற்றர் வரையான வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதால் மழைக்காலங்களில் பாடசாலை மாணவர்கள், உயிரை கையில் பிடித்துக்கொண்டே பயணிப்பதாகவும், இது தொடர்பில் பல தடவைகள் கோரிக்கை விடுக்கப்பட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.

சிறுவனின் மரணத்துக்கு இந்த வீதியும் ஒரு காரணம். இனியும் மக்களை பலிகொடுக்க நாம் தயாரில்லை. எமக்கான வீதி புனரமைக்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அரசியல்வாதிகளை தோட்டத்துக்குள் விட மாட்டோம்." எனவும் தோட்ட மக்கள் திட்டவட்டமாக குறிப்பிட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள்...

2025-03-25 15:25:35
news-image

அநுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

2025-03-25 14:52:55
news-image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து...

2025-03-25 15:23:15
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை...

2025-03-25 14:09:19
news-image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...

2025-03-25 13:46:30
news-image

உள்ளூர் அதிகார சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...

2025-03-25 13:54:47
news-image

சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும்...

2025-03-25 13:14:31
news-image

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை...

2025-03-25 13:00:07
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு...

2025-03-25 12:53:38
news-image

தேர்தல் செயற்பாடுகள், முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு...

2025-03-25 12:39:54
news-image

இலங்கையின் படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை...

2025-03-25 12:40:16
news-image

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச்...

2025-03-25 12:36:47