சமூக வலைத்தளங்களின் தாக்கம் காரணமாக இளம் தலைமுறையினர் பலர் தங்கள் தோற்றத்தை வெறுக்கும் மனநிலைக்கு ஆளாவதாக ஆய்வு தகவல் தெரிவிக்கின்றது.
குழந்தைகள், இளம் பருவத்தினர் மத்தியில் சமூக வலைத்தளங்கள் உருவாக்கம் தாக்கம் குறித்து லண்டனிலுள்ள 'தி கார்டியன்' (the Guardian) ஊடகம் புதிய ஆய்வு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதிர்ச்சி தரும் வகையில் பல எச்சரிக்கைகள் இதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு 12 முதல் 21 வயதுக்குட்பட்ட இளம் தலைமுறையினரிடம் நடத்தப்பட்டது. அதன்படி, ஆய்வில் பங்கேற்ற பாதிக்கும் மேற்பட்டோர் சமூக வலைத்தளங்களில் உருவ கேலிக்கு ஆளானதாக தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக தங்கள் உடல் மீதே வெறுப்பு உருவாகி பலரும் தனிமையை நோக்கி செல்வதாக தெரிவித்துள்ளனர். 12 வயது சிறார்களில் 4இல் 3 பேர் தங்கள் தோற்றத்தை வெறுப்பதாக கூறியுள்ளனர். அதேபோல், 18 முதல் 21 வயதை கொண்ட 10இல் 8 பேர் தங்கள் உருவம் அவமானம் தருவதாக உணர்கின்றனர். இவை அனைத்தும் சமூக வலைதளத்தால் இளம் தலைமுறையினரிடம் ஏற்பட்ட தாக்கம் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
இத்தகைய தாக்கத்தால் தங்களுக்கு தீவிர மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் பங்கேற்ற 40 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
ஆய்வில் பங்கேற்றவர்கள் 97 சதவீத்ததினருக்கு சமூக வலைத்தளங்கள் 12 வயதிலேயே அறிமுகம் ஆகிவிட்டதாக கூறியுள்ளனர். இதில் 70 சதவீதம் பேருக்கு சமூக வலைதளங்கள் அழுத்தம், பயம், டிப்ரஷன் போன்ற தாக்கங்களை தந்தாலும், அவர்கள் தினந்தோறும் சராசரியாக மூன்றரை மணிநேரம் சமூக வலைதளத்தில் செலவிடுவதாக கூறியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM