எந்த உப்பை உபயோகிக்கலாம்..?

Published By: Ponmalar

03 Jan, 2023 | 11:53 AM
image

நாம் சாப்பிடும் உணவு வகைகளில் உப்பு முக்கிய இடம் வகிக்கிறது. தற்போதைய இளம் பெண்மணிகள் சமையலறையில் மிகக் குறைவான நேரத்தை செலவிட விரும்புவதால், சமையலுக்கு எளிதாக பயன்படுத்தும் உணவு பொருட்களை தான் உபயோகிக்கிறார்கள். அந்த வகையில் தற்போது சந்தையில் கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு, லைட் உப்பு, சுப்பர் லைட் உப்பு என பல வகையினதான உப்புகள் விற்பனைக்கு உள்ளன. மக்கள் இந்த உப்புகளில் எதனை தெரிவு செய்து பயன்படுத்த வேண்டும் என்பதில் முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுவதில்லை என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். 

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு முன் உப்பு என்றால் வீதிகளில் விற்பனைக்கு வரும் கல்லுப்பை எம்முடைய இல்லத்தரசிகள் வாங்கி சேமித்து வைத்து அதனை பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது ஆலையில் சுத்திகரிக்கப்பட்ட உப்பு என்றும், சுத்திகரிக்கப்பட்டு அதில் உள்ள சோடியம் அளவை குறைத்து, பொட்டாசியம் அளவை அதிகரித்து செறிவூட்டப்பட்ட உப்பு ஆகியவையும் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

பொதுவாக நாம் உணவில் உப்பு சேர்த்துக் கொள்வது சுவைக்காக மட்டுமல்ல. எம்முடைய நரம்பு மண்டலத்தின் சீரான இயக்கத்திற்கு தூண்டுதலாக இருப்பவை உப்பும், உப்பில் உள்ள சோடியம் எனும் தாதுக்களும், வேறு கனிம நுண்ணூட்ட சத்துக்களும் தான். ஆனால் இவை எந்த உப்பில் அதிகம் என்பதுதான் தற்போது பொது மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குழப்பம். கல் உப்பு, தூள் உப்பு, இந்துப்பு என மூன்று உப்புகளிலும் சோடியத்தின் அளவு ஏறக்குறைய சமமான அளவில் தான் இருக்கிறது. அதே தருணத்தில் செறிவூட்டப்பட்ட உப்பு எனப்படும் லைட் மற்றும் சுப்பர் லைட் உப்புகளில் பொட்டாசியத்தின் அளவு அதிகம் என்பதால் சிறுநீரக நோயாளிகள் அல்லது சிறுநீரக கல் பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தகைய  செறிவூட்டப்பட்ட உப்பினை தவிர்ப்பது நல்லது என ஊட்டசத்து நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். 

ரத்தக்கொதிப்பு பாதிப்புள்ளவர்களும் உப்பை பயன்படுத்துவதில் மருத்துவரின் அறிவுரையை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் எடுத்துரைக்கிறார்கள்.

உப்பை பொறுத்தவரை கல் உப்பு மற்றும் இந்துப்பில் சோடியத்தை தவிர வேறு சில கனிம நுண்ணூட்ட சத்துகள் இருப்பதால் இதனை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கிறார்கள். மேலும் நாளாந்தம் ஒருவருக்கு 6 கிராம் அளவிற்கான உப்பு மட்டும் தான் தேவை. எனவே இதனை மனதில் கொண்டு உப்பை பயன்படுத்த வேண்டும் என ஊட்டச்சத்தின் நிபுணர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பியோஜெனிக் கிரானுலோமா எனும் பாதிப்புக்குரிய நவீன...

2025-02-15 18:38:50
news-image

நாக்டூரல் மஸுல் கிராம்ப்ஸ் எனும் இரவு...

2025-02-13 15:44:09
news-image

ஸ்பொண்டிலோலிஸ்டெஸிஸ் எனும் முதுகெலும்பில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-02-12 17:05:03
news-image

14,0000க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகள், குடும்பங்களுக்கு...

2025-02-12 14:15:17
news-image

பிறந்த பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்த சர்க்கரை...

2025-02-11 16:32:15
news-image

நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை கண்டறியும் நவீன...

2025-02-10 16:08:05
news-image

பெர்குடேனியஸ் ட்ரான்ஸ்லுமினல் கரோனரி ஓஞ்சியோபிளாஸ்ரி எனும்...

2025-02-08 16:28:44
news-image

மீண்டும் மீண்டும் ஏ என் ஏ...

2025-02-08 11:08:22
news-image

தனி பிரிவாக வளர்ச்சி அடைந்து வரும்...

2025-02-06 18:23:31
news-image

புளித்த ஏப்பம் எனும் பாதிப்பிற்கான நிவாரண...

2025-02-05 17:36:36
news-image

புளூரல் எஃபியூஸன் எனும் நுரையீரலில் ஏற்படும்...

2025-02-03 16:01:24
news-image

தோள்பட்டை வலிக்கு உரிய நிவாரண சிகிச்சை

2025-02-01 20:35:14