அஜித் குமார் நடிப்பில் பொங்கல் திருவிழா விடுமுறையில் வெளியாகவிருக்கும் 'துணிவு' திரைப்படத்தின் புதிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் பொலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் முன்னணி நட்சத்திர நடிகர் அஜித் குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'துணிவு'. இதில் அஜித் குமாருடன் நடிகை மஞ்சு வாரியர், நடிகர்கள் சமுத்திரக்கனி, ஜோன் கொக்கன், பிரேம், பக்ஸ், வீரா, அஜய், மகாநதி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். வங்கி கொள்ளை சம்பவம் ஒன்றை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இந்த திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. ரெண்டு மணித் தியாலம் 36 நிமிடங்கள் வரையிலான கால அவகாசம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு யு/ ஏ சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. முன்னணி நட்சத்திர நடிகர்களின் படங்கள் பிரம்மாண்டமான பட்ஜட்டில் தயாராகியிருந்தாலும் பட மாளிகையில் ஓடும் கால அளவு என்பது வெற்றியை நிர்ணயிக்க கூடிய காரணிகளில் ஒன்று என திரையுலக அனுபவஸ்தர்கள் தெரிவிக்கிறார்கள்.
அந்த வகையில் அஜித்குமாரின் 'துணிவு' திரைப்படம், ரசிகர்களின் படமாளிகை மனநிலைக்கு ஏற்ப பொருத்தமான கால அவகாசத்திற்குள் உருவாக்கப்பட்டிருப்பதால் இந்த திரைப்படம் பொக்ஸ் ஓபிஸில் வசூல் சாதனையை நிகழ்த்தும் என திரையுலக வணிகர்களும் தெரிவிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM