குடும்பத்துடன் சவூதி அரேபியாவை சென்றடைந்தார் ரொனால்டோ

Published By: Sethu

03 Jan, 2023 | 11:06 AM
image

போர்த்துகல் கால்பந்தாட்ட நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சவூதி அரேபியாவின் தலைநகர் றியாத்தை சென்றடைந்துள்ளார். 

றியாத் நகரிலுள்ள அல் நாசர் கழகத்தில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் விளையாடுவதற்கு ரொனால்டோ கையெழுத்திட்டுள்ளார்.   இதற்காக அவருக்கு வருடாந்தம் 200 மில்லியன் யூரோவுக்கு (சுமார் 7800 கோடி இலங்கை ரூபா/ 1,768 கோடி இந்திய ரூபா) அதிகமான ஊதியம் வழங்கப்படும் என நம்பப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

நேற்றிரவு ரொனால்டோ றியாத் நகரை சென்றடைந்தார். அவரை வரவேற்பதற்கான பதாகைகள் றியாத் நகரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

AFP PHOTO / AL NASR FC

ரொனால்டோவுடன்  அவரின் மனைவி ஜோர்ஜியா ரொட்றிகஸ் மற்றும் குடும்பத்தினரும் சவூதி அரேபியாவுக்குச் சென்றுள்ளனர்.

உதவியாளர்களைக் கொண்ட பெரிய குழுவுடன் அவர் வந்துள்ளார். தனியார் பாதுகாப்பு நிறுவன உத்தியோகத்தர்களையும் அவர் அழைத்துவந்துள்ளார் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ரொனால்டோ  வரும் நிலையில், றியாத் நகரின் விமான நிலையத்தைச் சூழ கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பல சோதனைச்சாவடிகளும் அமைக்கப்பட்டிருந்தன.

AFP PHOTO / AL NASR FC

AFP PHOTO / AL NASR FC

AFP PHOTO 

தொடர்புடைய செய்தி

சவூதியின் அல் நாசர் கழகத்தில் இணைந்தார் ரொனால்டோ; 7,800 கோடி ரூபா சம்பளம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு...

2025-02-07 20:48:52
news-image

14ஆவது இந்துக்களின் சமர்: பலமான நிலையில்...

2025-02-07 20:17:12
news-image

ஜடேஜாவின் துல்லியமான பந்துவீச்சு, கில், ஐயர்,...

2025-02-07 17:05:20
news-image

புனித சூசையப்பர் அணியின் 11 வயது...

2025-02-07 13:22:16
news-image

இந்துக்களின் சமர் - நாணய சுழற்சியில்...

2025-02-07 11:38:55
news-image

14ஆவது இந்துக்களின் கிரிக்கெட் சமர்  யாழ்....

2025-02-06 19:07:08
news-image

100ஆவது டெஸ்டில் விளையாடும் திமுத் கருணாரட்ன...

2025-02-06 14:37:36
news-image

முதலில் துடுப்பாட்டத்திலோ, பந்துவிச்சிலோ ஈடுபட்டால் அதில்...

2025-02-05 20:39:54
news-image

சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அரங்கிலேயே சர்வதேச...

2025-02-05 20:26:28
news-image

ரி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி...

2025-02-05 13:38:39
news-image

துடுப்பாட்ட சாதனையுடன் பந்துவீச்சிலும் அசத்திய அபிஷேக்...

2025-02-03 18:09:33
news-image

19 வயதின் கீழ் மகளிர் உலகக்...

2025-02-03 15:26:27