புருஷ ஹத்தி தோஷம்/ஸ்திரி ஹத்தி தோஷம் பாதிப்பும், அதற்கான பரிகாரமும்...!

Published By: Ponmalar

03 Jan, 2023 | 11:04 AM
image

பொதுவாக எம்மில் பலரும் பிரம்ம ஹத்தி தோஷம், பித்ரு தோஷம், களத்திர தோஷம், புத்திர தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவற்றை பற்றி அறிந்து வைத்திருப்பர். சிலர் இத்தகைய தோசங்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான பரிகாரத்தை மேற்கொண்டு, அதிலிருந்து மீண்டு, உரிய பலனை அடைந்திருப்பார்கள். ஆனால் வெகு சிலரே புருஷ ஹத்தி தோஷம் என்றும், ஸ்திரி ஹத்தி தோஷம் என்ற தோஷமும் இருக்கிறது என அறிந்திருப்பார்கள். இந்நிலையில் இந்த புருஷ ஹத்தி தோஷம் என்றால் என்ன? ஸ்திரி ஹத்தி தோஷம் என்றால் என்ன? என்பதை பற்றி தொடர்ந்து காண்போம்.

எம்மில் சிலர் அலுவலகத்தில் உடன் பணியாற்றும் சக ஆண் ஊழியர்களை பற்றியோ... பெண் ஊழியர்களை பற்றியோ.. தவறான நடத்தை உள்ளவர் என்ற பிம்பத்தை உருவாக்குவர் அல்லது தொடர்புடைய ஆண் அல்லது பெண்ணின் தோற்றத்தை கண்டவுடன் தவறானவர்கள் என மனதில் ஒரு பிம்பத்தை உருவாக்கிக் கொள்வர்.

வேறு சிலர் குடியிருக்கும் வீதிகளில் வசிக்கும் ஆண்களைப் பற்றி பெண்மணிகளும், இளம்பெண்கள் மற்றும் பெண்மணிகளைப் பற்றி ஆண்களும் காமம் சார்ந்த பழிச்சொல்லை சுமத்துவர். இதற்கும் ஜோதிடத்திற்கும் தொடர்பு இருக்கிறது.

ஒரு சுப கிரகம், அசுப கிரகத்துடன் ஒரே நட்சத்திர பாதத்தில் இணைவு பெற்றால் அவை தோஷத்தை ஏற்படுத்துகிறது. காமம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு அதிபதியான சுக்கிர பகவானும், போகத்திற்கு அதிபதியான ராகுவும் குறிப்பிட்ட எல்லைக்குள் இணைந்திருந்தால் ஆண்களாக இருந்தால் புருஷ ஹத்தி தோஷமும் பெண்களாக இருந்தால் ஸ்த்ரீ ஹத்தி தோஷமும் ஏற்படுகிறது. சுக்கிரனுடன் ராகு, களஸ்திர ஸ்தானமாகிய ஏழாம் இடத்தில் இணைவு பெற்றால் இந்த தோஷம் ஏற்படும். 

இந்த தோஷம் ஏற்பட்டால் உத்தமனாக இருந்தாலும் அல்லது உத்தமியாக இருந்தாலும் காமம் சார்ந்த விடயங்களில் அவப்பெயர் மற்றும் அவமானம் உண்டாகும். குறிப்பாக சுக்கிர தசை, ராகு புத்தி கிலோ அல்லது ராகு திசை, சுக்கிர புத்தியிலோ இத்தகைய அவமானங்கள் ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகம். உதாரணத்திற்கு அவர்களுடைய அந்தரங்க புகைப்படங்கள் அவர்களுக்கு தெரியாமலேயே இணையத்தில் வெளியாக கூடும். இத்தகைய தருணத்தில் பெண்களும், ஆண்களும் இவ்விடயம் தொடர்பாக மனதளவில் பாதிக்கப்பட்டு, தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் கூட மேலோங்கும். சிலருக்கு அஷ்டம சனி, அஷ்டம ராகு போன்றவை கோச்சாரத்தில் நடைபெற்றால்.. இவை நடைபெறுவது உறுதி என சோதிட நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

விதி இருந்தால்... விதிவிலக்குகளும் உண்டு. அதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கான பரிகாரங்களும் உண்டு என்பதனை அழுத்தமாக தெரிந்து கொள்ள வேண்டும். இந்த ஸ்திரி ஹத்தி  தோஷம் உள்ள பெண்களும், புருஷ ஹத்தி தோஷம் உள்ள ஆண்களும், இறை வழிபாடுடன் பரிகாரங்களை மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பிலிருந்து முழுமையாக நிவாரணமும், மனநிம்மதியும் பெறலாம்.

ஆண்களாக இருந்தால் ஞாயிற்றுக்கிழமையன்றும், பெண்களாக இருந்தால் வெள்ளிக்கிழமையன்றும் பரிகார வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். 108 அகல் விளக்குகளை பசு நெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். அதனை மேற்கொள்ளும்போது மஞ்சள் வண்ணத் துணியில் அமர வேண்டும். பரிகாரம் செய்பவர்கள் ஆண்களாக இருந்தால்.., திருமணமாகாத கன்னி பெண்ணிற்கு வெற்றிலை, பாக்கு, பழங்கள் ஆகியவற்றுடன் வஸ்திர தானமும், தன தானமும் செய்ய வேண்டும். பரிகாரம் செய்பவர்கள் பெண்களாக இருந்தால், திருமணம் ஆகாத ஆண் ஒருவருக்கு வெற்றிலை, பாக்கு, பழங்கள் ஆகியவற்றுடன் வஸ்திர தானமும், தன தானமும் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு இறைவனின் சன்னதியில் குறைந்தபட்சம் ஒரு நாழிகை கால அவகாசம் வரை மனம் உருகி தியானித்து இத்தகைய அவச்சொல் மற்றும் அவமானத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் என பிரார்த்தித்தால்.., உங்களது பிரார்த்தனை நிறைவேறும்.

-சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சகல சௌபாக்கியங்களையும் பெறுவதற்கான இறை வழிபாட்டு...

2024-03-01 19:13:04
news-image

செல்வவளம் கொழிக்க நாளாந்தம் மேற்கொள்ள வேண்டிய...

2024-02-27 15:20:20
news-image

தன வரவை அதிகரிக்கும் சித்தர் வழிபாடு

2024-02-26 18:06:13
news-image

தடைகளை அகற்றி தன வருவாயை அதிகரிக்கச்...

2024-02-25 21:22:54
news-image

யாரெல்லாம் ஆலயத்துக்கு சென்று இறைவனை வழிபடக்கூடாது!?

2024-02-24 14:29:42
news-image

நல்ல பலன்களை அவதானிக்கும் காலக்கணித முறை

2024-02-23 15:56:41
news-image

தடைகளை அகற்றி தன வரவை அதிகரிக்கும்...

2024-02-20 16:53:46
news-image

முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் அள்ளித் தரும் காவல்...

2024-02-19 18:53:02
news-image

திதி நித்ய தேவதைகளை வழிபடும் முறைகளும்,...

2024-02-17 16:39:32
news-image

அனைத்து வளங்களையும் அள்ளித் தரும் திதி...

2024-02-16 17:55:02
news-image

உங்கள் உடலில் நோயை உண்டாக்கும் கிரகங்களும்...

2024-02-14 17:05:33
news-image

வல்லமை தரும் உபாசனை தெய்வ வழிபாடு..!

2024-02-13 16:37:25