ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தனது நாட்டுக்காக சேவை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தென் கொரியாவைச் சேர்ந்த பான் கீ மூன் தற்போது ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கடமையாற்றி வருகின்ற நிலையில் அவருடைய பதவிக்காலம் இம் மாதம் முடிவடைகின்றது.
இதேவேளை தென் கொரியாவின் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல்கள் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பிலிருந்து ஓய்வு பெறும் பான் கீ மூன், தனது ஓய்வின் பின்னர் தாய் நாட்டு எவ்வாறான முதன்மையான சேவைகளை செய்ய முடியுமோ அதனை செய்வேன் என தனது இறுதி ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுகளுக்கு முகம்கொடுத்துள்ள தற்போதைய தென்கொரிய ஜனாதிபதி பார்க் {ஹன்ஜுஹை, ஜனாதிபதி பதவியிலிருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ள போதும் அவரை பதவி விலகுமாறும் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையிலேயே பான் கீ மூன் தனது தாய் நாட்டுக்கு சேவை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
எனவே பான் கீ மூன் தென் கொரிய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM