புகையிரத நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் - புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம்

Published By: Digital Desk 2

02 Jan, 2023 | 08:04 PM
image

(இராஜதுரை ஹஷான்)

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் நிலவும் பற்றாக்குறைக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் நாட்களில் மாத்தறை முதல் பெலியத்தை,தலைமன்னார் முதல் மதவாச்சி  வரையிலான புகையிரத நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும் என புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (ஜன.02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

அரச சேவையில் 60 வயதை பூர்த்தி செய்தவர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற வேண்டும் என அரசாங்கம் எவ்வித திட்டமிடலும் இல்லாமல் எடுத்த தீர்மானம் புகையிரத சேவை துறையை தற்போது மிக மோசமான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.

பெரும்பாலான மக்களின் பிரதான போக்குவரத்து ஊடகமாக புகையிரத சேவை காணப்படுகிறது.புத்தாண்டு காலத்தில் வழமைக்கு மாறாக அதிக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்த வேண்டும்,ஆனால் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் கூட புகையிரதங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

அரசாங்கத்தின் தூரநோக்கற்ற சிந்தனையால் கடந்த மாதம் 31 ஆம் திகதி முதல் நாளாந்தம் 40 இற்கும் அதிகமான புகையிரத சேவைகள் இரத்து செய்யப்படுகின்றன.

ஏனைய அரச சேவைகளை போல் புகையிரத சேவை தனித்த சேவை அல்ல.புகையிரத சேவையில் ஒவ்வொரு பிரிவும் முக்கியமானது.ஒரு பிரிவின் சேவை பாதிக்கப்பட்டால் முழு புகையிரத சேவை கட்டமைப்பும் பாதிக்கப்படும் என்பதை தீர்மானம் எடுக்கும் அரச தரப்பினர் விளங்கிக் கொள்ள வேண்டும்.

புகையிரத சேவையில் 500 கனிஸ்ட மற்றும் உயர் சேவையாளர்கள் சேவையில் இருந்து ஓய்வுப் பெற்றுள்ளார்கள், இவர்களில் புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் உள்ளடங்குகிறார்கள்.

பெரும்பாலான புகையிரத நிலையங்களில் அனைத்து பணிகளையும் நிலைய பொறுப்பதிகாரி செய்ய வேண்டிய நிலை காணப்படுகிறது.

புகையிரத நிலைய பொறுப்பதிகாரிகள் சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு தீர்வு காணாவிட்டால் எதிர்வரும் நாட்களில் மாத்தறை தொடக்கம் பெலியத்த மற்றும் தலைமன்னார் முதல் மெதவாச்சி வரையிலான புகையிரத நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும்.புகையிரத நிலைய அதிபர் சேவையில் நிலவும் ஆளணி பற்றாக்குறைக்கு விரைவான தீர்வு வழங்காவிட்டால் எதிர்வரும் நாட்களில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கைக் கடற்படையின் படகு விபத்து: தொடரும்...

2026-08-16 13:04:58
news-image

ஷங்காய் மாநாட்டிற்கு செல்லும் ஜனாதிபதி அநுர

2026-08-16 08:55:06
news-image

ஆகஸ்ட் 30-இல் சர்வதேச மாநாடு: காணாமல்...

2026-08-16 08:56:43
news-image

அரசாங்கத்தின் திட்டங்களுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து கிடைக்கும்...

2026-08-16 11:34:51
news-image

சிங்கப்பூர் வெளிவிவகார மற்றும் உள்துறை அமைச்சரை...

2026-08-16 09:28:15
news-image

‘ஸ்பைடர் வுமன்’ என்றழைக்கப்படும் போதைப்பொருள் வியாபாரி...

2026-08-16 08:40:39
news-image

சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி வழி...

2026-08-16 08:39:58
news-image

22 ஆவது திருத்தம் செவ்வாய் பாராளுமன்றில்...

2026-08-16 08:39:12
news-image

இவ்வாண்டில் பொருளாதார வளர்ச்சி 4 -...

2026-08-16 09:24:32
news-image

சொகுசு காரில் மாடுகள் கடத்தல்: ‘ஐஸ்’...

2026-08-16 08:36:01
news-image

கடுவலை பகுதியில் இன்று விசேட போக்குவரத்து...

2026-08-16 10:06:59
news-image

டெங்கு ஒழிப்பிற்கான வோல்பெக்கியா திட்டம்  ஆரம்பம்

2026-08-16 09:57:27