மியன்மாரில் உள்ள சிறுபான்மை இனத்தவர்களான ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீதான தாக்குதல் மற்றும் பெண்கள் மீதான பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இது தொடர்பில் தெரிவித்துள்ளதாவது,
மியன்மாரில் சிறுபான்மை இனமான ரொஹிங்கியா முஸ்லிம்கள் மீது பாரியளவில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.
நோபல் பரிசு வென்ற ஆன் சான் சூகி ஆட்சியில் இருக்கும் போது இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது மிகவும் கவலையளிக்கின்றது. இச் சம்பவங்கள் தொடருமாயின் பாரதூரமான விளைவை ஏற்படுத்தும்.
இதுவரையான காலப்பகுதியில் 86 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 27 ஆயிரம் பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மியன்மார் உடனடியாக இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடின் நாட்டின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM