பொலிவூட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கும் 'அனிமல்'

Published By: Digital Desk 2

02 Jan, 2023 | 03:03 PM
image

பொலிவூட் திரையுலகின் நட்சத்திர நடிகர்களில் ஒருவரான ரன்பீர் கபூர் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'அனிமல்' எனும் திரைப்படம், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு புத்தாண்டு வாழ்த்துக்களுடன் பிரத்யேக போஸ்டர் மூலம் வெளியிடப்பட்டிருக்கிறது.

'அர்ஜுன் ரெட்டி' எனும் திரைப்படத்தை இயக்கி, இந்திய அளவில் கவனத்தை ஈர்த்த இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'அனிமல்'. இதில் ரன்பீர் கபூர், அணில் கபூர், பொபி தியோல், ரஷ்மிகா மந்தானா, சௌரப் சுக்லா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அமித் ராய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்தின் பின்னணி இசையை ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் மேற்கொண்டிருக்கிறார்.

கிரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பத்ரகாளி பிக்சர்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் பிரனாய் ரெட்டி வங்கா மற்றும் டி சிரீஸ் நிறுவனத்தின் பூஷன் குமார் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'அர்ஜுன் ரெட்டி' எனும் திரைப்படம் தெலுங்கில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாரிய வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இந்தி ரீமேக்கும் வெற்றி பெற்றதால், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படம் இந்தியில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37