எம்மில் சிலர் அவர்களுடைய நண்பர்களின் இல்லங்களுக்கு விருந்திற்காக சென்றிருக்கும் போது, அந்த வீட்டில் உள்ள பிள்ளைகள் உடல் சார்ந்த வித்தியாசமான நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதை கண்டிருப்போம்.
உதாரணத்திற்கு அடிக்கடி கண் சிமிட்டுதல், மூக்கை உறிஞ்சுதல், தொண்டையை செருமுதல், தோள்பட்டையை வித்தியாசமாக குலுக்கி கொள்தல், கழுத்தையும் தலையும் வித்தியாசமாக ஆட்டுதல்... இப்படி பல உடல் சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதை கண்டிருப்போம். இதுகுறித்து விசாரிக்கும் போது அவரும், அவருடைய பெற்றோர்களும் திடீரென்று ஏற்பட்ட பழக்கம் என்று விளக்கமளிப்பர். ஆனால் இது ஒரு நரம்பியல் பாதிப்பு என மருத்துவர்கள் எடுத்துரைக்கிறார்கள்.
இத்தகைய பாதிப்பிற்கு டிக் டிஸ்ஸார்டர் என்றும், இது டிரான்ஸிட் டிக் டிஸ்ஸார்டர் என்றும், க்ரானிக் டிக் டிஸ்ஸார்டர் என்றும் இரண்டு வகையாக உள்ளன என்று வகைப்படுத்துகிறார்கள். மேலும் உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பத்து மில்லியன் சிறார்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கிறார்கள். அதிலும் பெண் பிள்ளைகளை விட ஆண் பிள்ளைகள் அதிக அளவில் இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.
மூன்று வயதிலிருந்து பத்து வயதுக்குள்ளாக இருக்கும் சிறார்களுக்கு ஏற்படும் இத்தகைய பாதிப்பு, சிலருக்கு ஓராண்டிற்குள் தானாக சரியாகிவிடும். இவர்களுக்கு அறிகுறி என்பது அதிகபட்சம் ஒரு மாத காலம் வரை நீடிக்கும். வேறு சிலருக்கு இத்தகைய அறிகுறிகள் ஓராண்டுக்கு மேல் நீடிக்கும். அவர்கள் மருத்துவரை சந்தித்து ஆலோசனை, சிகிச்சையும் அவசியம் பெற வேண்டும். இதனை அலட்சியப்படுத்தி புறக்கணித்தால்.., கற்றல் குறைபாடுகள், உறக்கமின்மை பாதிப்பு, மன அழுத்த பாதிப்பு, கோபத்தை கட்டுப்படுத்த தெரியாத நிலை, கவன சிதறல், அதிநவீன குறைபாடு போன்றவை ஏற்படுவதற்கான சாத்திய கூறு அதிகம்.
இத்தகைய பாதிப்புகள் இருந்தால் கண்களை அடிக்கடி குறிப்பிட்ட லயத்தில் சிமிட்டுவர். தற்செயலாகவும், அனிச்சையாகவும் தலை மற்றும் கழுத்தை சேர்த்து குலுக்குவர். சோர்வு, தோள்பட்டை குலுக்கல், மூக்கு உறிஞ்சுதல், இருமல், செருமல், உதட்டை கடித்தல்... இது போன்ற அறிகுறிகள் வித்தியாசமாக இருந்தால், அவை ஒரு மாதத்திற்கு மேலாக தொடர்ந்தால்.. அதிலும் குறிப்பாக அவர்கள் விரும்பாத சூழலிலும், கட்டுப்படுத்த இயலாத வகையில் இந்த செயலை தொடர்ந்து செய்தால் அதனை டிக் டிஸஸார்டரின் அறிகுறி என உணர்ந்து கொண்டு சிகிச்சை பெற வேண்டும்.
இதன் போது மருத்துவர்கள் எம்ஆர்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், எலக்ட்ரோயென்ஸாப்லோகிராம் போன்ற பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள். மருந்துகள், மாத்திரைகள் மற்றும் நடத்தை சிகிச்சை முறைகளின் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவார்கள். இதன் பிறகும் முழுமையான நிவாரணம் கிடைக்கவில்லை என்றால், டீப் பிரைன் ஸ்டிமுலேஷன் எனப்படும் ஆழ் மூளை மின் தூண்டல் சிகிச்சை மூலம் நிவாரணம் வழங்குவார்கள்.
டொக்டர் வேணி
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM