மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி ஹைராத் நகரில் வீடொன்றை உடைத்து கொள்ளையிட்ட இரண்டு சந்தேக நபர்களை பொலிஸார் இன்று (ஜன. 2) கைதுசெய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஏ.றஹீம் தெரிவித்தார்.
தனது வீட்டை பூட்டிவிட்டு கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மௌலீது வைபவத்துக்குச் சென்றுவிட்டு, மீண்டும் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்கதவை உடைத்து பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இச்சம்பவத்தோடு தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து இரண்டு கேஸ் சிலிண்டர்கள், ஒரு டெப் கணினி, ஒரு கையடக்க தொலைபேசி என்பன மீட்கப்பட்டுள்ளன.
கைதான நபர்கள் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM