அஜித் குமாரின் 'துணிவு' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

02 Jan, 2023 | 01:34 PM
image

அஜித் குமார் நடிப்பில் தயாராகி இருக்கும் 'துணிவு' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டம் வெளியான 24 மணி தியாலத்தில் 25 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'துணிவு'. இம்மாதம் பன்னிரண்டாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் புத்தாண்டை முன்னிட்டு, கடந்த ஆண்டின் இறுதி நாளன்று மாலை ஏழு மணி அளவில் வெளியிடப்பட்டது. பெரும் எதிர்பார்ப்பிற்கிடையே வெளியான இந்த 'துணிவு' திரைப்படத்தின் முன்னோட்டம், எக்சன் ரசிகர்களுக்கு  விருந்தாக அமைந்தது. அஜித் குமார் வில்லனாக நடித்திருக்கும் காட்சிகள்.., அவருடைய அசால்ட்டான நடிப்பு.., எக்சன் காட்சிகள்.. என பரபரப்பும், விறுவிறுப்பும் நிறைந்திருந்தது.

இந்த முன்னோட்டம் உலக அளவில் புதிய சாதனையையும் படைத்திருக்கிறது. மலேசிய நாட்டில் 'துணிவு' திரைப்படத்தின் முன்னோட்டம் ஹாலோகிராம் எனும் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்டது. உலகத்திலேயே ஒரு திரைப்படத்தின் முன்னோட்டம் இத்தகைய தொழில்நுட்பத்தில் வெளியிடுவது இதுதான் முதல் முறை என்பதால், அஜித்தின் ரசிகர்கள் இதனை இணையத்தில் வைரலாக்கி கொண்டாடி வருகிறார்கள்.

'துணிவு' திரைப்படத்தில் அஜித் குமாருடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பிரேம்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பே வியூ ப்ராஜெக்ட்ஸ் எல்எல்பி என்ற நிறுவனமும், ஜீ ஸ்டுடியோஸ் எனும் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35