ஜனாதிபதி ரணில் நாட்டை சிறந்த  இலக்கை நோக்கி நகர்த்துவார் - ருவன் விஜேவர்த்தன நம்பிக்கை

Published By: Digital Desk 2

01 Jan, 2023 | 07:31 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை எனும் கப்பலை இலக்கிற்கு வழிநடத்த ஒரு சிறந்த கெப்டன் ஒருவரும் கிடைக்க பெற்றுள்ளது 

இலங்கை எனும் கப்பலை புதுப்பித்து, உயிரூட்டி இருப்பதுடன் கப்பலை அதன் பயண இலக்குக்கு வழிநடத்த ஒரு சிறந்த கெப்டன் ஒருவரும் கிடைக்க பெற்றுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

புதுவருட பிறப்பை முன்னிட்டு கம்பஹா பிரதேசத்தில் மத வழிபாடுகளில் ஈடுட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை எனும் கப்பலை புதுப்பித்து, உயிரூட்டி இருப்பதுடன் கப்பலை அதன் பயண இலக்குக்கு வழிநடத்த ஒரு சிறந்த கெப்டன் ஒருவரும் கிடைக்கப்பெற்றுள்ளது.

பொருளாதார வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை பொறுப்பேற்று முன்னெடுத்துச்செல்ல அனைவரும் பின்வாங்கிய நிலையில், மூழ்கிக்கொண்டிருந்த கப்பலை மீட்டது, ஜனாதிபதி பதவியின்  கடினமான பொறுப்பை தயக்கமின்றி தோல்மீது சுமந்துகொண்ட ரணில் விக்ரமசிங்கவாகும்.

அத்துடன் ஆயிரக்கணக்கான சவால்களை எதிர்கொண்ட ஜனாதிபதி, செயற்படுத்திய வேலைத்திட்டங்கள் காரணமாகவே கப்பல் மீண்டும் புதிப்பித்து உயிரூட்டப்பட்டிருக்கின்றது. 

அதனால் கடந்த வருடத்தில் பெற்றுக்கொண்ட பாரிய அனுபவங்களுடனே புது  வருடத்துக்கு கால் எடுத்து வைக்கின்றோம். எனவே நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண நாங்கள் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும் என்றார்

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25
news-image

கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும்...

2025-02-18 15:05:00
news-image

வெல்லவாய - தணமல்வில பிரதான வீதியில்...

2025-02-18 14:31:12
news-image

பாகிஸ்தானில் பயிற்சியை முடித்துக்கொண்டு இலங்கையை வந்தடைந்தது...

2025-02-18 15:31:41
news-image

மே மாதம் வரை வெப்பநிலை தொடரும்...

2025-02-18 13:40:43
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான வழக்கு விசாரணை...

2025-02-18 13:06:16
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் மு.கா...

2025-02-18 13:06:56
news-image

ஊடகவியலாளர்களின் உறுதியான பாதுகாவலராக திகழ்ந்தவர் சீதா...

2025-02-18 14:42:33
news-image

நீர்கொழும்பில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-18 12:46:23
news-image

ஐஸ், கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருட்களுடன்...

2025-02-18 12:47:54