கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் -  காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Published By: Nanthini

01 Jan, 2023 | 03:55 PM
image

புதுவருட தினமான இன்றும் (ஜன 1) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வவுனியாவில் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

வவுனியா, ஏ9 வீதியில், வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு முன்பாக 2142ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தாய்மாரால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம், அவர்களது போராட்ட பந்தலுக்கு முன்பாக இடம்பெற்றது.

இதன்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட மற்றும் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட தமது பிள்ளைகளுக்கு நீதி தேவை என்பதோடு அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், இறையாண்மையுடனான தீர்வே பாதிக்கப்பட்டோருக்கு தேவை என தெரிவித்து, மாதிரி வாக்களிப்பையும் மேற்கொண்டிருந்தனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். 

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்வைக்கும் தீர்வை எந்தத் தமிழரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் பிள்ளைகளின் தாய்மார்கள் உட்பட பாதிக்கப்பட்ட தமிழ் மக்களால் முன்வைக்கப்பட்ட தீர்வை மட்டும் தான் தமிழர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அரசியல் தீர்வை எவ்வாறு காண்பது? 

தெற்கு சூடான், எரித்திரியா, கொசோவா, கிழக்கு திமோர் ஆகிய நாடுகளில் கடந்த காலங்களில் நடந்த ஐ.நா.வின் கண்காணிப்பு வாக்கெடுப்பு ஒன்றே சிறந்த வழி.

நோர்வே தூதர் எரிக் சொல்ஹெய்ம், ஒரு மத்தியஸ்த பாத்திரத்தை வகிக்க விரும்புவதை இப்போது நாம் காண்கிறோம். 

தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையில் மத்தியஸ்தராக மீண்டும் வருவதற்கு இரகசியமாக செயற்பட்டு வருகின்றார். நாங்கள் அதை எதிர்க்கவில்லை. ஆனால், மேற்கு தேச அரசியல் கட்டமைப்பை மேசைக்கு கொண்டு வர விரும்புகிறோம்.

ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பை நடத்துவதற்கு எங்களிடம் 3 சாத்தியமான அரசியல் தீர்வுகள் உள்ளன. தமிழர் இறையாண்மை, மேற்கத்திய பாணி ஜனநாயகம், ரணில் - சம்பந்தன் ஒப்பந்தத்தில் இருந்து தீர்வு... இதைத்தான் எங்கள் பதாகையில் எழுதியுள்ளோம்.

முழு உலகமும், குறிப்பாக, இலங்கை கண்காணிப்பு குழுக்கள் மற்றும் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் பெரும்பங்கை ஐ.நா. கண்காணிக்கும் வாக்கெடுப்பினை நடத்துவதில் பங்கு வகிக்கும் என நம்புகிறோம்.

புலம்பெயர் தமிழ் மக்கள், எமது தமிழ் இறையாண்மை மிக்க தேசத்தில் முதலீடு செய்து, அபிவிருத்தி செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றமையால், அரசியல் தீர்வு விடயத்தில் எமது நேரத்தை வீணடிக்க நாம் விரும்பவில்லை என்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26
news-image

29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி...

2023-03-26 14:11:27
news-image

ஒருவரின் இரு கைகளையும் வெட்டி கடலில்...

2023-03-26 14:14:39
news-image

பாணந்துறையில் கடல் அலைகளால் அடித்துச் செல்லப்பட்ட...

2023-03-26 13:01:41
news-image

புத்தாண்டு காலத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் பொருட்களை...

2023-03-26 12:40:27