(எம்.வை.எம்.சியாம்)
புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காகவும் மேலும் கிராமங்களுக்குச் சென்று மீளவும் கொழும்பு திரும்பும் மக்களுக்காகவும் நாடளாவிய ரீதியில் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலன் மிராண்டா தெரிவித்துள்ளார்.
அதன்படி, கடந்த முதலாம் திகதிக்கு பின்னர் கிராமங்களுக்கு சென்ற மக்கள் மீண்டும் கொழும்புக்கு வருவதற்கு பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
பயணிகளின் தேவைகளை எவ்வித அசௌகரியமும் இன்றி நிறைவேற்றும் வகையில் கொழும்பில் இருந்து வெளி மாகாணங்களுக்கு பஸ் சேவை அமுல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் பயணிகள் 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து ஆணைக்குழுவிற்கு அறிவிக்க முடியும் எனவும் இதன் மூலம் பயணிகள் தேவையான தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, புத்தாண்டை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை விசேட பஸ் சேவையையும் ஆரம்பித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அதன் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்ச கொழும்பு பிரதான பஸ் நிலையத்தில் இருந்து இன்று முதல் 03 ஆம் திகதி வரை இந்த விசேட பஸ் சேவை இடம்பெறவுள்ளது.
அதன்படி, கிராமங்களுக்குச் சென்று கொழும்பு திரும்பும் மக்களுக்காக நாடளாவிய ரீதியில் மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM