2023ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் மக்கள் வங்கியின் தற்காலிக பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பொது முகாமையாளராக கிளைவ் பொன்சேகா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொன்சேகா திறைசேரி நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற உள்நாட்டு மற்றும் உலகளாவிய வங்கிகளில் 30 வருடங்களுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு மூத்த வங்கியாளர் ஆவார்.
மக்கள் வங்கியில் இணைவதற்கு முன்பு அவர் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் வங்கி ஆகியவற்றில் பணியாற்றியுள்ளார். பொன்சேகா அவர்கள் இலங்கை மத்திய வங்கியினால் பல தடவைகள் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் துறையை அபிவிருத்தி செய்வதற்கான பின்வருவன உள்ளிட்ட பல முக்கிய சபைகளின் அங்கத்தவராக பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளார்.
• உள்நாட்டு நிதிச் சந்தை உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்த சந்தைப் பணிக்குழு
• இலங்கை நிதிச் சந்தையில் தற்போதுள்ள அடிப்படை வட்டி வீதங்களை மீளாய்வு செய்ய
நாணயச் சபை செயலணி
• நிதி அமைப்பு ஸ்திரத்தன்மை ஆலோசனைக் குழு
• தற்போதுள்ள கொடுப்பனவு மற்றும் தீர்வு உள்கட்டமைப்பின் இடைவெளிகள் மற்றும் எதிர்கால தேவைகளை ஆய்வு செய்து இனங்காண்பதற்கான குழு அத்துடன், கிளைவ் பொன்சேகா அவர்கள் முதன்மை வணிகர்கள் சங்கத்தின் தலைவராகவும் பணியாற்றியுள்ளதுடன், தற்போது பீப்பிள்ஸ் லீசிங் புரொப்பர்ட்டி டெவலப்மெண்ட் லிமிட்டெட்டின் தலைவராகவும் உள்ளார். அவர் முதன்மை வணிகர்கள் சங்கம், லங்கா பே (பிரைவேட்) லிமிட்டெட், இலங்கையின் கடன் தகவல் பணியகம் (மாற்று பணிப்பாளர்), பீப்பிள்ஸ் லீசிங் அன்ட் ஃபினான்ஸ் பிஎல்சி மற்றும் லங்கா அலையன்ஸ் ஃபினான்ஸ் லிமிட்டெட் (பங்களாதேஷ்) ஆகியவற்றின் பணிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.
பொன்சேகா அவர்கள் இலங்கையின் வங்கியாளர்கள் கற்கை நிறுவகத்தின் உறுப்பினராவார் மற்றும் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக முகாமைத்துவ மேற்பட்டப்படிப்பு நிலையத்தில் வணிக நிர்வாக முதுமாணி பட்டம் பெற்றவர். அவர் அவுஸ்திரேலியாவின் சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட உறுப்பினராகவும் (CMA) உள்ளார். பொன்சேகா, மொரட்டுவை புனித செபஸ்தியன் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
1961ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க மக்கள் வங்கிச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கியானது, ரூபா 3.0 டிரில்லியனுக்கு கிட்டிய ஒருங்கிணைந்த சொத்துக்களுடன் நாட்டின் இரண்டாவது பாரிய நிதிச் சேவை வழங்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, இவ்வங்கி நாடு முழுவதும் 743 கிளைகள் மற்றும் சேவை மையங்களைக் கொண்டுள்ளதுடன் மற்றும் 14.5 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது. The Banker Magazine (UK), உலகின் தலைசிறந்த 1000 வங்கிகளில் ஒன்றாக மக்கள் வங்கியை இனங் கண்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM