கர்ப்பப்பை கட்டிகளை கண்டறிவோம்

Published By: Ponmalar

31 Dec, 2022 | 04:06 PM
image

(Fibroid uterus) கர்ப்பப்பையின் உட்பகுதியிலோ நடுப்பகுதியிலோ அல்லது வெளிப்புற பகுதியிலோ கட்டி ஏற்படலாம். மாதந்தோறும் அதிக ரத்தபோக்கு, வலி, குழந்தையின்மை, அடிக்கடி ஏற்படும் கருச்சிதைவு, அடிவயிற்றுவலி, அடிவயிற்றில் இருக்கும் கட்டியை உணர்தல், கட்டியின் அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய சிறுநீரக பிரச்சினைகள் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். 50 சதவீதம் கட்டிகள் எவ்வித அறிகுறியுமின்றி இருக்கலாம். பரிசோதனை செய்து ஸ்கேன் மூலமும் இக்கட்டியை கண்டறியலாம். 

Adenomyosis: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய endometrial glands என்று அழைக்கக்கூடிய சுரப்பிகள் கர்ப்பப்பை உள்ளே இல்லாமல் வெளியில் இருந்தால் இப்பிரச்சினை உண்டாகும். 

Endometriosis: கர்ப்பப்பையின் உள்ளே இருக்கக்கூடிய endometrial glands என்று அழைக்கப்படும் சுரப்பிகள் கர்ப்பப்பை உள்ளே இல்லாமல் வெளியில் இருந்தால் இப்பிரச்சினை உண்டாகும். 

இதன் அறிகுறிகள்: மாதவிடாய் கோளாறுகள் குழந்தையின்மை, தொடர்ந்து இருக்கும் அடி வயிற்றுவலி மாதவிடாய் ஆரம்பிக்கும் சில நாட்களுக்கு முன்பே தாங்க முடியாத வயிற்று வலி போன்ற அறிகுறிகள் மூலம் கர்ப்பப்பையில் கட்டி இருப்பதை உணரலாம். இவ்வலி மாதவிடாய் ஆரம்பிக்கும் வரையோ அல்லது முடியும் வரையோ நீடிக்கலாம். 

சினை முட்டை கட்டிகள்: சிறு எலுமிச்சை பழம் அளவில் இருந்து பூசணி அளவில் இக்கட்டிகள் இருக்கலாம். 70 சதவீத கட்டிகள் கேன்சர் இல்லாத கட்டிகளாகவும், 30 சதவீதம் கேன்சர் கட்டிகளாகவும் இருக்கலாம். கேன்சர் கட்டிகளாக இருப்பின் எடை குறைதல், பசி குறைதல், வயிற்றில் நீர் சேருதல் போன்ற அறிகுறிகள் இருக்கும். 

இடம் மாறி கருத்தரித்தல்: சில நேரங்களில் கர்ப்பப்பையில் கர்ப்பம் தங்காமல் கருப்பை வெளியில் கருமுட்டை குழாயில் கருத்தரிக்கலாம். இவ்வகை கர்ப்பத்தினால் அதிக வயிற்றுவலியுடன் மயக்கம் மற்றும் கருமுட்டை குழாய் வெடித்தால், வயிற்றுக்குள் ரத்த கசிவால் உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம். எனவே கர்ப்பம் என அறிந்த பின் ஸ்கேன் மூலம் கண்டறிதல் மிக அவசியம். 

அடி இறங்குதல்:(vaginal prolapse) அடி இறங்குதல் என்பது குழந்தை பிறப்புறுப்பு வழியாக கர்ப்பப்பை இறங்குதல் மற்றும் சிறுநீர்ப்பை, மலக்குடல் இறங்குதல் ஆகும். இதன் அறிகுறிகள் பெண்ணின் பிறப்புறுப்பில் கட்டி போன்று இருத்தல் மற்றும் சிறுநீரக கோளாறுகள் வெள்ளைப்படுதல் ஆகும். 

மகளிருக்கான சிறப்பு பரிசோதனை: 

1. பேப் ஸ்மியர் என்பது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோயை முன்பாக அறிந்து கொள்ள செய்யப்படும் பரிசோதனை ஆகும். 

2. எண்டோ மெட்ரியல் பையாப்சி என்பது கர்ப்பப்பையில் ஏற்படும் திசுக்களுக்கான சிறப்பு பரிசோதனை. 

3. கால் போஸ்கோ தபி என்பது கர்ப்பப்பை வாய்பகுதியை கண் கூடாக பரிசோதனை செய்தல் ஆகும். 

4. சர்வைக்கல் பையாப்சி என்பது கர்ப்பப்பை வாயில் ஏற்படும் புற்றுநோய் கண்டறிதலுக்கான பரிசோதனை ஆகும். 

Dr.லதாலட்சுமி மகப்பேறு நிபுணர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நரம்பு வலிக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2025-01-13 15:56:02
news-image

பியோஜெனிக் ஸ்போண்டிலோடிசிடிஸ் எனும் முதுகெலும்பு தொற்று...

2025-01-09 16:19:03
news-image

புல்லஸ் எம்பஸிமா எனும் நுரையீரல் நோய்...

2025-01-08 19:25:03
news-image

இன்சுலினோமா எனும் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும்...

2025-01-07 17:23:56
news-image

கார்டியோபல்மனரி உடற்பயிற்சி சோதனை - CPET...

2025-01-06 16:52:15
news-image

ஹைபர்லிபிடெமியா எனும் அதீத கொழுப்புகளை அகற்றுவதற்கான...

2025-01-05 17:50:36
news-image

ரியாக்டிவ் ஒர்தரைடீஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2025-01-03 16:39:17
news-image

உணவுக் குழாய் பாதிப்பு - நவீன...

2025-01-02 16:38:45
news-image

கை விரல் நுனியில் ஏற்படும் பாதிப்பிற்கான...

2025-01-01 21:40:07
news-image

யூர்டிகேரியா எனும் தோல் அரிப்பு பாதிப்பிற்கு...

2024-12-31 17:09:55
news-image

ஆட்டிசம் குழந்தைகளுக்கு நிவாரணம் அளிக்கும் நவீன...

2024-12-30 16:33:25
news-image

தாடை வலி பாதிப்பிற்குரிய நவீன சத்திர...

2024-12-27 16:53:23