பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து நாடு சுபீட்சம் காண வேண்டும் - புத்தாண்டுச் செய்தியில் திகாம்பரம்

31 Dec, 2022 | 07:18 PM
image

மலர்ந்துள்ள புத்தாண்டில் “மலையகம்-200” என்பது பேசு பொருளாகப் பரிணமித்துள்ளது. இது ஒரு கொண்டாட்டம் அல்ல: மாறாக நாம் ஒவ்வொருவரும் எமது எதிர்கால வாழ்வாதாரம் பற்றி சிந்திக்க வேண்டிய விடயமாகும் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் விடுத்துள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தமது செய்தியில்,

புத்தாண்டில் நாட்டு மக்கள் அனைவரது வாழ்விலும்  மகிழ்ச்சி  நிறைய வேண்டும் என்று வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் எதிர் கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து நாடு சுபிட்சம் காண வேண்டும். அரசியல் ரீதியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண ஜனாதிபதி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மலையகத்தைப் பொறுத்த வரையில் எமது மக்கள் இந்த நாட்டில் குடியேறி இருநூறு வருடங்கள் நிறைவு பெறுகின்றன. இதைக் கொண்டாடும் வகையில் எமது சமூகம் வீடு, காணி முதலான சகல அடிப்படை உரிமைகளையும் பெற்று விடவில்லை. எமது உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலையிலேயே நாம் இருந்து வருகிறோம். 

எனவே, எமது எதிர்காலத்தை கருத்திற் கொண்டு அதற்கான வேலைத் திட்டத்தை முன்வைத்து அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுத்து உரிமைகளை வென்றெடுப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காலியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2025-01-22 15:43:51
news-image

திருமண வயது எல்லையை பொது வயது...

2025-01-22 15:43:57
news-image

மட்டக்களப்பில் ஐஸ், கேரள கஞ்சா, கசிப்புடன்...

2025-01-22 15:31:29
news-image

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச்...

2025-01-22 15:31:13
news-image

ஹட்டனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

2025-01-22 15:03:10
news-image

கிளிநொச்சியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம்;...

2025-01-22 15:09:36
news-image

சிங்கக் குட்டிகளுக்கு பெயரிட பொதுமக்களுக்கு அரிய...

2025-01-22 14:58:50
news-image

வாய்க்காலில் வீழ்ந்து கெப் வாகனம் விபத்து

2025-01-22 14:52:38
news-image

2014 முதல் நஷ்டத்தில் இயங்கிய ஶ்ரீலங்கன்...

2025-01-22 14:32:57
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-01-22 14:28:32
news-image

உடன்பிறந்த அண்ணனை கத்தியால் குத்திக் கொன்ற...

2025-01-22 14:10:47
news-image

வெள்ளவத்தையில் பெண் கடத்தல் ;  முன்னாள்...

2025-01-22 13:47:52