ஈழப்போரின் இறுதி நாட்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் 16 நாடுகளில் வரவேற்பு பெற்று, 29 சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறது.
அண்மையில் இடம்பெற்ற நேபாள அரசின் கலாசார விழாவில் இத்திரைப்படத்துக்காக இதன் இயக்குநர் மதிசுதன் கெளரவிக்கப்பட்டார்.
தயாரிப்பாளரே கிடைக்காத உள்நாட்டு சினிமாவில் ஐஃபோனில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், பிரம்மாண்ட பட நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்று, இவ்விருதினை பெற்றிருக்கிறது.
ஈழ மக்களின் வலிகளை மதிசுதன் தனது திறமையான இயக்கத்தால் உலகுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகமான அறிவகத்தில் இன்று சனிக்கிழமை (டிச. 31) நடைபெற்ற ஒளிவிழாவில் மதிசுதன் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நடைபெற்ற இந்த கௌரவிப்பு நிகழ்வில் அருட்தந்தையர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உபதவிசாளர்கள், உறுப்பினர்கள், கட்சியின் செயற்பாட்டாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM