அழகு குறிப்பு

Published By: Ponmalar

31 Dec, 2022 | 01:44 PM
image

    • தினமும் அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்.
    • வெள்ளரிக்காயை கண்களில் சிறிது நேரம் வைத்து அமைதியாக உட்கார்ந்தால், கண்களில் இருக்கும் சோர்வு நீங்கி, கருவளையங்களும் நீங்கிவிடும்.
    • தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும், இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.
    • முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.
    • தேங்காய் எண்ணெய் வெதுவெதுப்பாக சூடேற்றி, தலைக்கு தடவி 20 நிமிடம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முடி வளர்ச்சி அதிகரிப்பதோடு, முடி அடர்த்தியாக வளரும். இரவில் தலைக்கு மசாஜ் செய்துவிட்டு, காலையில் குளிப்பது நல்ல பலனை தரும்.
    • கூந்தலுக்கு கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக தயிரைப் பயன்படுத்தினால், கூந்தல் நன்கு பட்டுப் போன்று, மென்மையாக இருக்கும். முடி உதிர்வு பிரச்சினை நீங்கி, முடி அடர்த்தியாக வளர உதவி செய்யும்.
    • சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.
    • கூந்தல் அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர எலுமிச்சை மிகவும் உதவி செய்கின்றது, அதாவது எலுமிச்சை சாறுடன் சிறிதளவு தயிர் கலந்து தலைக்கு மசாஜ் செய்து, பின்பு சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் தலை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வர தலை சுத்தமாக காணப்படும். மேலும் பொடுகு தொல்லை நீங்கும், அதேபோல் முடி உதிர்வு பிரச்சினை தடுக்கப்படும்.
    • உதடு மென்மையாக மற்றும் வறட்சியின்றியும் இருப்பதற்கு லிப்-பாம்களை பயன்படுத்தாமல், சிறிது நெய்யை தடவி வந்தால், உதடுகளில் வெடிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். இவ்வாறு செய்வதினால் உதடு மென்மையாக மற்றும் வறட்சியின்றியும் காணப்படும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்