நடிகர் சிலம்பரசன் நடிப்பில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படமான ' பத்து தல' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
'சில்லுன்னு ஒரு காதல்', 'நெடுஞ்சாலை' ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் என். கிருஷ்ணா இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் 'பத்து தல'. இது சிலம்பரசன் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் கலையரசன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
பாரூக் ஜே. பாஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை புயல் ஏ. ஆர். ரகுமான் இசையமைத்திருக்கிறார். எக்சன் என்டர்டெய்னர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் ஜெயந்திலால் கட்டா ஆகியோர் தயாரித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதியன்று சிலம்பரசன்- கௌதம் கார்த்திக் இணைந்து மிரட்டும் 'பத்து தல' திரைப்படம் வெளியாகிறது.
'மாநாடு', 'வெந்து தணிந்தது காடு' ஆகிய படங்களின் வணிக ரீதியான வெற்றிக்குப் பிறகு, சிலம்பரசன் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'பத்து தல' எனும் திரைப்படமும் வெற்றி பெற்று திரையுலகில் ஹாட்ரிக் வெற்றியை வழங்குவார் என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM